தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மஹா., போக்குவரத்து அதிகாரிக்கு மிரட்டல் 

 மஹா., போக்குவரத்து அதிகாரிக்கு மிரட்டல் 

 மஹா., போக்குவரத்து அதிகாரிக்கு மிரட்டல் 


ADDED : ஏப் 21, 2026 02:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2026 02:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சோழதேவனஹள்ளி: நிழல் உலக தாதா பிஷ்னோய் ஆதரவாளர் என்று கூறி, மஹாராஷ்டிரா போக்குவரத்து துறை அதிகாரியை மிரட்டிய நபர் மீது வழக்குப்பதிவாகி உள் ளது.

மஹாராஷ்டிராவின் காஷிகான் வட்டார போக்குவரத்து துறையில் அதிகாரியாக பணி செய்பவர் பிரசாத் சிவதாஸ் நல்வாடே. பெங்களூரின் சோழதேவனஹள்ளியில் நடந்த அகில இந்திய மோட்டார் பாதுகாப்பு தொழில்நுட்ப நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சாலை பாதுகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது அவரது மொபைல் போனுக்கு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், 'நிழல் உலக தாதா பிஷ்னோய் ஆதரவாளர்' என்று கூறினார். 'நீங்கள் ஏழை ஆட்டோ டிரைவர்களை தொந்தரவு செய்கிறீர்கள். இப்படி செய்தால் உங்களை சும்மா விட மாட்டோம்' என்று மிரட்டி விட்டு இணைப்பை துண்டித்தார்.

மஹாராஷ்டிரா திரும்பிய பிரசாத், காஷிகான் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். மர்மநபர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் வழக்கை, சோழதேவனஹள்ளி போலீஸ் நிலையத்திற்கு மாற்றி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us