/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பைக்கை மறித்த போலீசார் மூன்றரை வயது குழந்தை பலி
/
பைக்கை மறித்த போலீசார் மூன்றரை வயது குழந்தை பலி
ADDED : மே 26, 2025 11:34 PM
மாண்டியா : போக்குவரத்து போலீசாரின் அவசரத்தால் மூன்றரை வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. போலீசாரை பலரும் கண்டித்தனர்.
மாண்டியா மாவட்டம், மத்துார் தாலுகாவின் கொரவனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக், 32. இவரது மனைவி வாணி, 27. தம்பதிக்கு மூன்றரை வயதில், ஹிருதீக்ஷா என்ற பெண் குழந்தை இருந்தது.
நேற்று காலையில், வீட்டின் வெளிப்புறம் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது குழந்தையை தெரு நாய் கடித்தது. காயமடைந்த மகளை பெற்றோர், பைக்கில் அமர்த்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். மத்துார் சாலையில் போக்குவரத்து போலீசார், ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன பயணியரை சோதனையிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, குழந்தையுடன் சென்ற அசோக்கின் பைக்கை, திடீரென போலீசார் வழிமறித்தனர். இதனால் பைக் நிலை தடுமாறி, மூவரும் விழுந்தனர். இதில் சிறுமியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தாயும், தந்தையும் லேசான காயம் அடைந்தனர். இச்சம்பவத்துக்கு, போக்குவரத்து போலீசாரின் குளறுபடியே காரணம் என, அப்பகுதியினர் குற்றஞ்சாட்டினர். மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.