ADDED : ஏப் 23, 2025 07:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு : பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தா நேற்று அளித்த பேட்டி:
ஹெச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட் பகுதியில் பெண்ணிடம் தங்க செயின் திருட்டு தொடர்பாக, ஹொரமாவு சந்தீப், 44, ரஜத், 38, ஆகிய இருவரை பானஸ்வாடி போலீசார் கைது செய்தனர். 1.15 லட்சம் மதிப்புள்ள தங்க செயின்கள் மீட்கப்பட்டன.
இது போன்று, பஸ்சில் தங்க செயின் திருட்டு போய்விட்டது என கோனனகுண்டே போலீஸ் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் செய்தார். வீவர்ஸ் குடியிருப்பு பகுதியில் வசித்த தமிழகத்தைச் சேர்ந்த ராஜேஷ், 25, கைது செய்யப்பட்டார். திருடிய நகையை ஷிவமொக்காவில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளார். எட்டு லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், பைக்குகள் மீட்கப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.