sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ரியல் எஸ்டேட் ஏஜன்டை கடத்தி கொலை செய்த மூன்று பேர் கைது?

 ரியல் எஸ்டேட் ஏஜன்டை கடத்தி கொலை செய்த மூன்று பேர் கைது?

 ரியல் எஸ்டேட் ஏஜன்டை கடத்தி கொலை செய்த மூன்று பேர் கைது?


ADDED : மார் 10, 2026 05:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2026 05:57 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆனேக்கல்: கடத்தி செல்லப்பட்ட ரியல் எஸ்டேட் ஏஜன்ட், கொலை செய்யப்பட்டு தமிழகத்தின் தேன்கனிக்கோட்டையில் பிணமாக கிடந்தார்.

சிக்கபல்லாபூர் மாவட்டத்தின் ஹொன்ன களசாபுரா கிராமத்தில் வசித்தவர் கோபால், 35. இவர் ரியல் எஸ்டேட் தொழிலும், சிறிய அளவில் வட்டி தொழிலும் செய்து வந்தார். இவர் பணி நிமித்தமாக நேற்று முன் தினம் இரவு, 7:30 மணியளவில் சதீஷ் என்பவருடன் காரில் புறப்பட்டார்.

பெங்களூரு ரூரல் மாவட்டம், ஆனேக்கல் தாலுகாவின், கர்பூர் அருகே செல்லும் போது, வேறொரு காரில் வந்த மர்ம கும்பல், கோபால் பயணித்த கார் மீது மோதியது. அதன்பின் அவர் முகத்தில் மயக்க மருந்தை ஸ்ப்ரே செய்து கடத்திச் சென்றனர்.

இதுகுறித்து, அவரது குடும்பத்தினர் ஜிகனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். கடத்தல்காரர்களை கண்டுபிடிக்க, ஆனேக்கல் டெபுடி எஸ்.பி., மோகன்குமார் தலைமையில், ஏழு சிறப்பு படைகள் அமைக்கப்பட்டன. போலீசாரும் ப ல்வேறு சுற்றுப்பகுதிகளில் தீவிரமாக தேடினர். இரவு முழுதும் தேடியதில், தமிழகத்தின் தேன்கனிக்கோட்டை அருகே, கோபால் கொலை செய்யப்பட்டு கிடந்தது, நேற்று காலையில் தெரிய வந்தது.

உடலை மீட்ட போலீசார், கொலையாளிகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்தனர். மற்றொரு ரியல் எஸ்டேட் ஏஜன்டான மோகன்பாபுவே, கூலிப்படையை ஏவி கோபாலை கொலை செய்துள்ளதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதற்கு முன் மோகன்பாபுவுக்கு உதவியாளராக, கோபால் இருந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன், வேலையை விட்டு விட்டு சுயமாக தொழில் துவங்கினார். குறுகிய காலத்தில் பொருளாதார ரீதியில் வளர்ந்தார். தன்னிடம் வேலை செய்தவர் தன் கண் முன்னே முன்னேறுவதை, மோகன்பாபுவால் சகிக்க முடியவில்லை. பொறாமை காரணமாக கோபாலை ஆள் வைத்து கடத்தி, கொலை செய்துள்ளதாக குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

போலீசாரும் மோகன்பாபு, கிரண், மகேஷ் ஆகியோரி டம் விசாரித்தனர். மோகன் பாபு, 25 லட்சம் ரூபாய் கொடுத்து, கோபாலை கொலை செய்ய வைத்தது தெரிய வந்தது. மூவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஆனேக்கல் போலீஸ் நிலையம் முன், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us