/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்த மூன்று பேர் கைது
/
போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்த மூன்று பேர் கைது
போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்த மூன்று பேர் கைது
போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்த மூன்று பேர் கைது
ADDED : மார் 26, 2025 05:49 AM

கத்ரிகுப்பே, : அகாடமியில் படித்த மாணவர்களுக்கு போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து கொடுத்த, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு கத்ரிகுப்பே ராம்ராவ் லே - அவுட்டில் தனியார் அகாடமி செயல்பட்டு வருகிறது. இந்த அகாடமியில் தொலைதுார கல்வி மூலம் மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி., - பி.யு.சி., படித்து வருகின்றனர்.
இந்த அகாடமியில் சில மாதங்களுக்கு முன்பு, மாணவர் ஒருவர் எஸ்.எஸ்.எல்.சி., வகுப்பில் சேர்க்கப்பட்டார். அவர் எந்த தேர்வும் இதுவரை எழுதவில்லை.
ஆனால், அவர் தேர்வு எழுதி வெற்றி பெற்றதாக மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கப்பட்டது. அந்த சான்றிதழை வழங்க அகாடமி நடத்திய தார்வாடை சேர்ந்த பிரசாந்த் குண்டுமி, 41, பெங்களூரு பனசங்கரி சீனிவாஸ் நகரின் மோனிஷ், 36, கதக் லட்சுமேஸ்வரின் ராஜசேகர், 41, ஆகியோர் 5,000 ரூபாய் கேட்டனர்.
இதுபற்றி அந்த மாணவர், தன் உறவினர் ஒருவரிடம் கூறினார். அந்த நபர், மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், நேற்று முன்தினம் மூன்று பேரையும் கைது செய்தனர்.
விசாரணையில் தங்கள் அகாடமியில் படிக்கும் மாணவர்களிடம் இருந்து 5,000 முதல் 10,000 ரூபாய் வரை வாங்கிக் கொண்டு, போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்தது தெரிந்தது.
இந்த சான்றிதழை பயன்படுத்தி சிலர், அரசு வேலைகளில் சேர்ந்ததும் தெரிய வந்துள்ளது. இதுவரை 350 பேருக்கு போலி மதிப்பெண் சான்றிதழ் வழங்கியதாக கைதான 3 பேரும் கூறி உள்ளனர். கைதானவர்களிடம் இருந்து 50 போலி மதிப்பெண் சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விசாரணை நடக்கிறது.