தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெண்ணின் அந்தரங்க வீடியோவை காட்டி மிரட்டிய மூன்று பேர் கைது

 பெண்ணின் அந்தரங்க வீடியோவை காட்டி மிரட்டிய மூன்று பேர் கைது

 பெண்ணின் அந்தரங்க வீடியோவை காட்டி மிரட்டிய மூன்று பேர் கைது


ADDED : பிப் 06, 2026 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2026 05:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெலகாவி: பெண்ணின் அந்தரங்க வீடியோவை வைத்து, 'பிளாக்மெயில்' செய்து 50 லட்சம் ரூபாய் கேட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.

பெலகாவி நகர போலீஸ் கமிஷனர் பூஷண் போரசே, நேற்று அளித்த பேட்டி:

பெலகாவி மாவட்டம், கோகாக் தாலுகாவின், ஜலால் கல்லியில் வசிப்பவர் நிசார் அகமது ஷேக், 32. யோகிகொள்ளாவின் அப்துல் ரஷத் நசீர் அகமது மகாம்தார், 51. கட்டபிரபாவில் வசித்தவர் முகமது திலாவர் பாளேகுந்த்ரி, 43. இவர்களில் ஒருவர் தகவல் அறியும் உரிமை ஆர்வலர்.

இம்மூவரும் தங்களுக்கு அறிமுகம் உள்ள பெண், வெளியே செல்லும் போது வீட்டை பூட்டி, சாவியை வெளிப்பகுதியில் மறைத்து வைத்து செல்வார். இந்த விஷயம் இம்மூவருக்கும் தெரியும். இவர்கள் சாவியை எடுத்து வீட்டை திறந்து உள்ளே சென்று, பல இடங்களில் ரகசிய கேமராக்களை ஒளித்து வைத்தனர்.

இதன் மூலம், அப்பெண்ணின் அந்தரங்க வீடியோவை, தங்களின் மொபைல் போனில் பதிவு செய்துள்ளனர். இதை அப்பெண்ணிடம் காட்டி, 50 லட்சம் ரூபாய் கேட்டனர். பணம் கொடுக்காவிட்டால் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டினர்.

இது குறித்து, அப்பெண் மாளமாருதி போலீஸ் நிலையத்தில், புகார் அளித்தார். போலீசாரும் மூவரை கைது செய்தனர். அவர்கள் பெண்ணின் வீட்டில் வைப்பதற்காக, 'ஆன்லைன்' வழியாக ஆறு கேமராக்கள் வாங்கினர். இவற்றை பெண்ணின் வீட்டில் வைத்தனர். இவற்றை நாங்கள் கண்டுபிடித்தோம்.

பெண்கள் ஹோட்டல், ஷோரூம், திரையரங்கு போன்ற பொது இடங்களுக்கு செல்லும் போது, மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாஷ் ரூமுக்கு செல்லும் போது, கேமரா உள்ளதா என்பதை உறுதிப்படுத்துவது நல்லது. அதே போன்று, வீட்டை பூட்டி விட்டு சாவியை, வெளியே வைத்து செல்லும் வழக்கம் சரியல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us