/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பணத்துக்காக நண்பரை கடத்திய சிறுவன் உட்பட மூவர் கைது
/
பணத்துக்காக நண்பரை கடத்திய சிறுவன் உட்பட மூவர் கைது
பணத்துக்காக நண்பரை கடத்திய சிறுவன் உட்பட மூவர் கைது
பணத்துக்காக நண்பரை கடத்திய சிறுவன் உட்பட மூவர் கைது
ADDED : பிப் 02, 2026 04:42 AM
எலக்ட்ரானிக் சிட்டி: வாழ்க்கையில் முன்னேறுவதற்காக, சரக்கு வாகனத்தை விற்று, 'டாக்சி' வாங்க நினைத்த நண்பரை கடத்தி, பணம் பறிக்க முயற்சித்த இரு நண்பர்கள், சிறுவன் என மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து, எலக்ட்ரானிக் சிட்டி பிரிவு துணை கமிஷனர் நாராயண் கூறியதாவது:
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி ஹெப்பகோடியை சேர்ந்த வாலிபர், சரக்கு வாகனம் ஓட்டி வந்தார். இந்த வாகனத்தை விற்று, 'டாக்சி' வாங்க தீர்மானித்தார். இது குறித்து தன் நண்பர்களிடமும் கூறியிருந்தார். அவர் கூறியபடி, சரக்கு வாகனத்தை விற்றுவிட்டதாக நண்பர்களிடம் கூறினார்.
இதையறிந்த காஜா, ஜான் பீட்டர் ஆகியோர், இந்த பணத்தை அபகரிக்க தீர்மானித்தனர். அதன்படி, ஜன., 30ம் தேதி இரவு 7:00 மணியளவில், ஹெப்பகோடியில் இருந்த வாலிபரை, நண்பர்கள் இருவரும் ஆட்டோவில், ஆழ்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு சென்ற பின், வாலிபரை தாக்கி, அவரிடம் இருந்து 1,500 ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். அதுமட்டுமின்றி மேலும் 50,000 ரூபாய் வழங்க வேண்டும். இல்லையெனில் கொன்று விடுவதாக மிரட்டினர்.
அச்சமடைந்த அவர், தனது சகோதரனுக்கு போன் செய்து, பணத்தை கொண்டுவர கூறினார். சகோதரனி ன் குரலில் நடுக்கும் இருந்ததை உணர்ந்த அவர், ஹெப்பகோடி போலீசில் புகார் அளித்தார்.
உடனடியாக மொபைல் போன் சிக்னலை ஆய்வு செய்து, அவர்களின் மறைவிடத்தை கண்டுபிடித்து, வாலிபரை மீட்டனர். காஜா, ஜான் பீட்டர் மற்றும் 17 வயது சிறுவன் என மூன்று பேர் கைது செய்யப் பட்டு உள்ளனர். படுகாயம் அடைந்த வாலிபர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.

