தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மாணவர்களை மிரட்டிய மூவர் மீது வழக்கு

 மாணவர்களை மிரட்டிய மூவர் மீது வழக்கு

 மாணவர்களை மிரட்டிய மூவர் மீது வழக்கு


ADDED : செப் 05, 2026 03:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 05, 2026 03:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மங்களூரு: ஹோட்டலில் புகுந்து மாணவர்களை மிரட்டிய ஹிந்து அமைப்பை சேர்ந்த, மூவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு மூடபிதரே பஸ் நிலையத்திற்கு அருகே உள்ள ஹோட்டலில் நேற்று முன்தினம் தனியார் கல்லுாரியை சேர்ந்த இரண்டு முஸ்லிம் மாணவியர், இரண்டு மாணவர்களுடன் சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

அப்போது, ஹிந்து அமைப்பான பஜ்ரங் தளத்தை சேர்ந்த சஞ்சய் ஹெக்டே, 31, பிரேம் பண்டாரி, 28, ரித்தில் பூஜாரி, 29, ஆகியோர் ஹோட்டலுக்குள் திடீரென நுழைந்து, மாணவர்களை பார்த்து, ஆபாச வார்த்தைகளால் திட்டி, மிரட்டினர்.

தகவலறிந்த மூடபிதரே போலீசார், தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர். ஹிந்து அமைப்பை சேர்ந்த மூவர் மீது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us