விநாயகர் சதுர்த்திக்கு கூடுதல் பஸ்கள் கே.எஸ்.ஆர்.டி.சி., அறிவிப்பு
விநாயகர் சதுர்த்திக்கு கூடுதல் பஸ்கள் கே.எஸ்.ஆர்.டி.சி., அறிவிப்பு
ADDED : செப் 05, 2026 03:29 AM

பெங்களூரு: விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, பயணியரின் வசதிக்காக, பெங்களூரு உட்பட, மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் சிறப்பு பஸ்களை இயக்க, கே.எஸ்.ஆர்.டி.சி., முன் வந்துள்ளது.
இது குறித்து, கே.எஸ்.ஆர்.டி.சி., வெளியிட்டுள்ள அறிக்கை:
விநாயகர் சதுர்த்தி பண்டிகை முன்னிட்டு, வெளியூர்களுக்கு செல்லும் பயணியர் வசதிக்காக செப்டம்பர் 11 முதல், செப்டம்பர் 14 வரை, 2,500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
பெங்களூரில் இருந்து தர்மஸ்தலா, மடிகேரி, ஹுன்சூர், குஷால்நகர், விராஜ்பேட் ஹொரநாடு, குக்கே சுப்ரமண்யா, மங்களூரு, ஷிவமொக்கா, தார்வாட், ஹூப்பள்ளி, பெலகாவி என, கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களுக்கு, சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
அதே போல், தமிழகத்தின் சென்னை, கோவை, மதுரை, கேரளாவின் திருச்சூர், எர்ணாகுளம், மஹாராஷ்டிரா, கோவா, தெலுங்கானா போன்ற, வெளி மாநிலங்களுக்கும், கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்.
தர்மஸ்தலா, குக்கே சுப்ரமண்யா, ஷிவமொக்கா, மங்களூரு, பெலகாவி, ஹூப்பள்ளி, கார்வார், கலபுரகி, பல்லாரி, ஆந்திரா, தெலுங்கானாவின் ஹைதராபாத், விஜயவாடா, திருப்பதிக்கு செல்லும் பஸ்கள், பெங்களூரின் மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து, சிறப்பு பஸ்கள் புறப்படும்.
மைசூரு, மடிகேரி, ஹுன்சூர், குஷால்நகர், விராஜ்பேட் வழித்தடங்களில் செல்லும் பஸ்கள், மைசூரின், சாட்டிலைட் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும். சென்னை, கோவை, மதுரை, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் வழித்தடங்களில் செல்லும் சிறப்பு பஸ்கள், சாந்தி நகர் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.
பயணியர் ஒன்றாக 'டிக்கெட் புக்கிங்' செய்தால், டிக்கெட் கட்டணத்தில், 5 சதவீதம் தள்ளுபடி சலுகை அளிக்கப்படும். செல்லவும், திரும்பவும் டிக்கெட்களை சேர்த்து, முன் பதிவு செய்தால், 10 சதவீதம் தள்ளுபடி சலுகை கிடைக்கும்.
கர்நா டகா மட்டுமின்றி, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கோவா, மஹாராஷ்டிரா, புதுச்சேரியின் முக்கிய நகரங்களில் உள்ள, கே.எஸ்.ஆர்.டி.சி., கவுன்டர்களில், டிக்கெட் புக்கிங் செய்யலாம்.
பயணியர் புறப்படுவதற்கு முன், தங்களின் டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள, 'பிக் அப் பாயின்ட்' மற்றும் பஸ் நிலையத்தின் பெயரை, சரியாக கவனிக்க வேண்டும். கூடுதல் தகவல் வேண்டுவோர், www.ksrtc.karnataka.gov.in என்ற இணையதளத்தில், தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
