sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூரில் மூன்று நாட்கள் குடிநீர் நிறுத்தம்

பெங்களூரில் மூன்று நாட்கள் குடிநீர் நிறுத்தம்

பெங்களூரில் மூன்று நாட்கள் குடிநீர் நிறுத்தம்


ADDED : செப் 14, 2025 04:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2025 04:19 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பராமரிப்புப் பணிகள், குடிநீர் டேங்கர்களை சுத்தம் செய்யும் பணிகள் நடப்பதால், நாளை முதல் 17ம் தேதி வரை காவிரி குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இதுதொடர்பாக, பெங்களூரு குடிநீர் வாரிய தலைவர் ராம் பிரசாத் கூறியதாவது:

பெங்களூரு நகரில் வசிக்கும் மக்களுக்கு, எந்த இடையூறும் இல்லாமல் குடிநீர் வழங்க, குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. காவிரி குடிநீர் திட்டத்தின் கீழ், பணிகள் நடக்கின்றன.

குடிநீர் பாயும் குழாய்கள், தண்ணீர் சேகரிப்பு தொட்டிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடக்கவுள்ளது. இயந்திரங்களை பழுதுநீக்க வேண்டியுள்ளது. இதனால் அதே போன்று, நடமாடும் காவிரி குடிநீர் திட்டத்தின் கீழ், வீடுகளுக்கு சென்று குடிநீர் விநியோகிக்கும் டேங்கர்களும் சுத்தம் செய்யப்பட வேண்டியுள்ளது. எனவே நாளை முதல் 17ம் தேதி வரையிலான மூன்று நாட்கள், காவிரி குடிநீர் விநியோகம் இருக்காது. டேங்கர் மூலமாகவும் மூன்று நாட்கள் குடிநீர் வினியோகம் இருக்காது.

பொது மக்கள் முன்னெச்சரிக்கையாக, மூன்று நாட்களுக்கு தேவையான குடிநீரை சேகரித்து வைத்துக்கொள்வது நல்லது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us