/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மரத்தில் சரக்கு ஆட்டோ மோதி மூன்று பேர் பலி
/
மரத்தில் சரக்கு ஆட்டோ மோதி மூன்று பேர் பலி
ADDED : அக் 30, 2025 11:09 PM
ஷிவமொக்கா:  வேகமாக சென்ற சரக்கு ஆட்டோ, மரத்தில் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர். ஓட்டுநர் காயங்களுடன் உயிர் தப்பினார்.
ஷிவமொக்கா நகரின், புறநகரின் கொந்தி சட்னிஹள்ளி கிராமத்தின் அருகில், நேற்று அதிகாலை சரக்கு ஆட்டோ அதிவேகமாக சென்று கொண்டிருந்தது.
அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, சாலையோர மரத்தின் மீது மோதியது. அதில் பயணம் செய்த அசாதுல்லா, 50, சாதிக், 30, பிரோஜ், 22, உயிரிழந்தனர். ஓட்டுநர் இர்பான் படுகாயமடைந்தார்.
தகவல் அறிந்து, அங்கு வந்த ஷிவமொக்கா ஊரக போலீசார், மூவரின் உடல்களை மீட்டனர். காயமடைந்த ஓட்டுநரை மருத்துவமனையில் சேர்த்தனர். வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
விபத்தில் இறந்த சாதிக்கும், அசாதுல்லாவும் தாவணகெரே மாவட்டம், சென்னகிரியை சேர்ந்தவர்கள். பிரோஜ் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர். இவர்கள் கார்பென்டர் பணி செய்தவர்கள்.
பணி நிமித்தமாக பாளஹொன்னுாருக்கு சென்றுவிட்டு, சரக்கு வாகனத்தில் சென்னகிரிக்கு திரும்பும்போது விபத்து நடந்துள்ளது. ஓட்டுநர் துாக்க கலக்கத்தில் இருந்ததால், விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

