/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நண்பரை குத்தி கொன்ற வாலிபர் கைது
/
நண்பரை குத்தி கொன்ற வாலிபர் கைது
ADDED : அக் 30, 2025 11:09 PM

கோனனகுண்டே:  நகை திருடப்பட்ட விஷயத்தில் ஏற்பட்ட தகராறில், நண்பரை கத்தியால் குத்திக் கொன்ற, வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு, கோனனகுண்டேயில் வசித்தவர் ராகுல், 23. இவரது நண்பர் பிரீத்தம், 23. நண்பர் வீட்டிற்கு ராகுல் அடிக்கடி செல்வது வழக்கம். சில தினங்களுக்கு முன், பிரீத்தமின் தாயின் நகைகள் வீட்டில் இருந்து திருட்டு போனது. ராகுல் மீது பிரீத்தம் சந்தேகப்பட்டார். இதுபற்றி கேட்டபோது தகராறு ஏற்பட்டது.
'நான் நகையை எடுக்கவில்லை. நீ தான் திருடி இருப்பாய்' என்று, பிரீத்தமை பார்த்து ராகுல் கூறினார். நேற்று முன்தினம் பிரீத்தமின் பையில் நகை இருந்தது. இதுபற்றி அவரது தாயிடம் ராகுல் கூறினார்.
'உங்கள் மகன் நகையை திருடிவிட்டு, என் மீது திருட்டு பட்டம் கட்டுகிறான்' என்றார். கோபம் அடைந்த பிரீத்தம், ராகுலை கத்தியால் சரமாரியாக குத்தினார். பலத்த காயம் அடைந்த ராகுல் இறந்தார். பிரீத்தமை, கோனனகுண்டே போலீசார் கைது செய்தனர்.

