/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முத்துராமலிங்க தேவர் 118வது ஜெயந்தி
/
முத்துராமலிங்க தேவர் 118வது ஜெயந்தி
ADDED : அக் 30, 2025 11:09 PM

மைசூரு:  கர்நாடக தேவர் சங்கம் சார்பில், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118வது ஜெயந்தி விழா, 63வது குருபூஜை விழா, மைசூரு ஜே.பி.நகர் ராஜண்ணா திருமண மண்டபத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.
கர்நாடக தேவர் சங்கத்தின் மைசூரு மண்டலத்தில் உள்ள மைசூரு, மாண்டியா, ஹாசன், சாம்ராஜ்நகர், குடகு மாவட்டங்களில் வசிக்கும் தேவர் சமூகத்தினர் சேர்ந்து விழாவை நடத்தினர்.
விழாவில், தேவர் சங்க தலைவர் எஸ்.கனகராஜ் தேவர், சங்கத்தின் வங்கியின் தலைவரும், முன்னாள் சங்க தலைவருமான ச.ஞானகுரு தேவர், முன்னாள் தலைவர் பாபு கே.தேவர், தற்போதைய சங்கத்தின் துணை தலைவர் முருகன் தேவர், பொருளாளர் பாண்டியராஜன் தேவர், செயற்குழு உறுப்பினர் சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முத்துராமலிங்க தேவரின் உருவப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செய்தனர்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் உருவப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்திய, கர்நாடக தேவர் சங்கத்தினர்.

