வந்தே மாதரம் புறக்கணிக்கப்பட்டது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி: ராஜ்நாத்
வந்தே மாதரம் புறக்கணிக்கப்பட்டது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி: ராஜ்நாத்
ADDED : டிச 08, 2025 10:08 PM

புதுடில்லி: முன்னாள் பிரதமர் நேரு காலத்தில் துவங்கிய திருப்திபடுத்தும் அரசியல் காரணமாக தேசிய பாடலான வந்தே மாதரம் ஓரங்கட்டப்பட்டது. இது இந்திய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.
லோக்சபாவில் அவர் பேசியதாவது: வந்தே மாதரம் பாடலுக்கு கிடைக்க வேண்டிய நீதி கிடைக்கவில்லை. தேசிய கீதமும், தேசிய பாடலும் சமமற்ற முறையில் நடத்தப்பட்டன. தேசிய கீதம் தேசிய உயர்வில் ஒரு இடத்தைப் பிடித்தது. ஆனால், தேசியப்பாடல் ஓரங்கட்டப்பட்டது. வந்தே மாதரத்துக்கு இழைக்கப்பட்ட அநீதி, ஒரு தனிமைபடுத்தப்பட்ட சம்பவம் அல்ல. மாறாக காங்கிரசின் திருப்திபடுத்தும் அரசியலின் துவக்கமாகும். இது ஒரு பாடலுக்கு இழைக்கப்பட்ட அநீதி அல்ல. சுதந்திர இந்திய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி.
வந்தே மாதரம் என்பது வெறும் வார்த்தைகள் அல்ல. அது உணர்ச்சி, கவிதை, துடிப்பு மற்றும் ஒரு தத்துவம். இந்தியர்களுக்கானதாக மட்டும் அல்லாமல், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கான மந்திரமாக மாறியுள்ளது.
1912 ம் ஆண்டு கோபால் கிருஷ்ண கோகலே தென் ஆப்ரிக்கா வந்த போது, வந்தே மாதரம் என சொல்லி வரவேற்றனர். பகத் ஷிங் மற்றும் சந்திரசேகர் ஆசாத் ஆகியோர் வந்தே மாதரம் என சொல்லி கடிதம் எழுதுவார்கள். இது சாதாரண பாடல் மட்டும் இல்லை.
முழுமையானதாக இருக்கும் வந்தே மாதரத்தை முழுமையில்லாததாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், ஒவ்வொரு முறையும் அது நம் நாட்டின் அழியாத பாடலாக இருந்து வருகிறது. அது அப்படியே இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

