தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/7 மாத ஊதிய பாக்கியை கேட்ட ஓட்டுநரை தாக்கிய மூவர் கைது

7 மாத ஊதிய பாக்கியை கேட்ட ஓட்டுநரை தாக்கிய மூவர் கைது

7 மாத ஊதிய பாக்கியை கேட்ட ஓட்டுநரை தாக்கிய மூவர் கைது


UPDATED : நவ 16, 2026 12:00 AM

ADDED : நவ 15, 2026 10:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 12:00 AM ADDED : நவ 15, 2026 10:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: ஜே.பி., நகரில் தண்ணீர் டேங்கர் விநியோகிக்கும் தொழில் நடத்தி வருபவர் சீனிவாஸ். இவரிடம் கடந்த இரண்டு ஆண்டுகளாக மோகன் என்பவர், தண்ணீர் டேங்கர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

ஆனால் ஏழு மாதங்களாக மோகனுக்கு சம்பளம் வழங்கவில்லை. இதனால் தனக்கு தர வேண்டிய பணத்தை தரும்படி, சீனிவாசிடம் பலமுறை கேட்டு சண்டையிட்டுள்ளார். பின், பணியில் இருந்து நின்றுவிட்டார். ஆனாலும், அவ்வப்போது சீனிவாசுக்கு போன் செய்து நிலுவையில் உள்ள தனது சம்பளத்தை வழங்கும்படி வலியுறுத்தி வந்ததால், வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த வாரம் மோகன் வீட்டுக்கு சீனிவாஸ் உட்பட நான்கு பேர் சென்றனர். அங்கு அவரை நான்கு பேரும் சேர்ந்து இரும்பு கம்பியால் அவரின் தலையில் தாக்கியதில் படுகாயம் அ டைந்தார்.

அப்போதும் கோபம் தீராத நான்கு பேரும், மோகனை தாங்கள் வந்த காரில் துாக்கி சென்றனர். அங்கிருந்து வேறொரு இடத்துக்கு அழைத்து சென்ற நான்கு பேரும், அவரை சரமாரியாக தாக்கியதில், மயக்கம் அடைந்தார். இறந்து விட்டதாக அஞ்சிய நான்கு பேரும், அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

மயக்கம் தெளிந்த மோகன், அங்கிருந்து தப்பித்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜே.பி., நகர் போலீசார், உரிமையாளர் சீனிவாஸ் உட்பட மூன்று பேரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us