பெண்களை விபசாரத்தில் தள்ளிய மூன்று பேருக்கு 10 ஆண்டு சிறை
பெண்களை விபசாரத்தில் தள்ளிய மூன்று பேருக்கு 10 ஆண்டு சிறை
ADDED : பிப் 10, 2026 04:12 AM
ஷிவமொக்கா: பணத்தாசை காட்டி, பெண்களை விபச்சாரத்தில் தள்ளிய மூன்று பெண்களுக்கு, 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, ஷிவமொக்கா மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஷிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகாவில் வசிப்பவர் சந்திரகலா, 30. இவர் தன் தோழிகள் ஷில்பா, 37, கவிதா, 35, ஆகியோருடன் சேர்ந்து, பெண்களை தவறான வழிக்கு திருப்பினார். பெண்களுக்கு வேலை வாங்கித் தருவதாக வீட்டுக்கு அழைத்து வந்து, விபசாரத்தில் ஈடுபடுத்தினார்.
வசதியில்லாத ஏழை குடும்ப பெண்களை குறிவைத்து, அவர்களுக்கு பணத்தாசை காட்டி, விபசாரத்தில் தள்ளினர். வீடு ஒன்றில் விபசாரம் நடப்பதாக, 2021 டிசம்பர் 24ல், பேப்பர் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்று சோதனை நடத்திய போலீசார், சில பெண்களை மீட்டனர். சந்திரகலா, ஷில்பா, கவிதாவை கைது செய்தனர்.விசாரணையை முடித்து, ஷிவமொக்காவின் நான்காவது கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
விசாரணையில் மூவரின் குற்றமும் உறுதியானதால், அவர்களுக்கு, 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, தலா, 1.61 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி இந்திரா மைலாசாமி நேற்று தீர்ப்பளித்தார்.
