/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மூன்று போலீஸ் அதிகாரிகள் 'சஸ்பெண்ட்'
/
மூன்று போலீஸ் அதிகாரிகள் 'சஸ்பெண்ட்'
ADDED : மார் 27, 2025 05:40 AM
மைசூரு: மைசூரு உதயகிரி கலவரத்தின்போது அலட்சியமாக செயல்பட்ட மூன்று போலீஸ் அதிகாரிகளை மைசூரு போலீஸ் கமிஷனர் சஸ்பெண்ட் செய்துள்ளார்.
மைசூரு, உதயகிரியைச் சேர்ந்த ஒருவர், சமூக வலைதளத்தில் இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பதிவிட்டு வந்தார்.
அவரை கைது செய்யுமாறு, கடந்த மாதம் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் உதயகிரி போலீஸ் நிலையத்திற்கு முன் போராட்டம் நடத்தினர்.
அப்போது, போலீஸ் நிலையத்தின் மீது கற்கள் வீசப்பட்டது.
இதனால், போலீசார் தடியடி நடத்தினர். அப்போது கலவரம் வெடித்தது. இது மாநில அளவில் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மைசூரு போலீஸ் கமிஷனர் சீமா லட்கர், கலவரத்தின்போது அலட்சியமாக செயல்பட்ட உதயகிரி போலீஸ் நிலைய எஸ்.ஐ., ரூபேஷ், உளவுத்துறை தலைமை போலீசார் பிரகாஷ், சமூக ஊடக கண்காணிப்புக்கு பொறுப்பு போலீஸ் சந்தோஷ் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சம்பவம் நடந்த ஒன்றரை மாதத்திற்கு பிறகு போலீசார் மீது நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.