கோலார் கடிகார கோபுரத்தில் மீண்டும் டிக்...டிக் சத்தம்
கோலார் கடிகார கோபுரத்தில் மீண்டும் டிக்...டிக் சத்தம்
UPDATED : அக் 29, 2026 12:00 AM
ADDED : அக் 28, 2026 09:24 PM

கோலார்: கோலார் நகரில் பல ஆண்டுகளாக இயங்காமல் முடங்கி கிடந்த, கிளாக் டவர் எனும் கடிகார கோபுரம், வரும் நவம்பர் 1-ம் தேதி முதல், மீண்டும் இயங்க உள்ளன.
இதற்காக கோலார் ம.ஜ.த., எம்.பி., மல்லேஷ் தொகுதி தனது மேம்பாட்டு நிதியிலிருந்து 14 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளார். கர்நாடக மாநிலம் உருவான நவம்பர் 1-ம் தேதியன்று கொண்டாடப்படும் கன்னட ராஜ்யோத்சவத்திற்குள் இரு கோபுரங்களிலும் கடிகாரங்களைப் பொருத்தி, மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
எம்.பி., மல்லேஷ் பாபு கூறியதாவது:
நாங்கள் சிறுவர்களாக இருந்த போது, கிளாக் டவர் மற்றும் பழைய பஸ் நிலையக் கோபுரங்களில் இருந்த கடிகாரங்களை பார்ப்பதே எங்களுக்கு வியப்பை ஏற்படுத்தும்.
கோலார் நகரின் பழமையான நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்கும் நோக்கில், இந்தக் கோபுரங்களில் மீண்டும் கடிகாரங்களைப் பொருத்த முடிவு செய்தேன். இதற்காக எனது எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தேவையான நிதியை ஒதுக்கியுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
