/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
யு.பி.ஐ., மூலம் டிக்கெட் ரூ.1 கோடி: புதிய சாதனை படைத்த பி.எம்.டி.சி.,
/
யு.பி.ஐ., மூலம் டிக்கெட் ரூ.1 கோடி: புதிய சாதனை படைத்த பி.எம்.டி.சி.,
யு.பி.ஐ., மூலம் டிக்கெட் ரூ.1 கோடி: புதிய சாதனை படைத்த பி.எம்.டி.சி.,
யு.பி.ஐ., மூலம் டிக்கெட் ரூ.1 கோடி: புதிய சாதனை படைத்த பி.எம்.டி.சி.,
ADDED : பிப் 08, 2025 06:28 AM
பெங்களூரு: பி.எம்.டி.சி., பஸ்களில் க்யூ.ஆர்., கோடு ஸ்கேனர் மூலம் டிக்கெட் கட்டணம் வசூலித்ததில் ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதில் பி.எம்.டி.சி., பஸ்களின் பங்கு அதிக அளவில் உள்ளது. தினமும் லட்சக்கணக்கில் மக்கள் பயணம் செய்கின்றனர். பல பஸ்களில் பயணியருக்கும், நடத்துனருக்கும் இடையே சில்லறை பிரச்னை ஏற்படுவது வழக்கம்.
இதற்கு தீர்வு காணும் வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு, பி.எம்.டி.சி., பஸ்களில் க்யூ.ஆர்., கோடு ஸ்கேனர் மூலம் கட்டணம் செலுத்தும் நடைமுறை கொண்டு வரப்பட்டது. இதனால், சில்லறை பிரச்னை தீர்ந்தது. தற்போது, பயணியர் பலரும் கையில் பணம் கொடுத்து வாங்குவதை தவிர்த்து, க்யூ.ஆர்., கோடு ஸ்கேனர் மூலம் டிக்கெட் வாங்கி வருகின்றனர். கடந்த மாதத்தில் ஸ்கேனர் மூலம் டிக்கெட் வாங்குவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது.
இம்மாதம் 3ம் தேதி, ஒரே நாளில் மட்டும் ஸ்கேனர் மூலம் டிக்கெட் வாங்கியதில் ஒரு கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. மாதத்திற்கு 8 கோடி முதல் 10 கோடி ரூபாய் வரை வசூலாகும் இடத்தில், ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய் வசூலானது. இது, பி.எம்.டி.சி., வரலாற்றில் சாதனையாக பார்க்கப்படுகிறது.