UPDATED : நவ 09, 2026 12:00 AM
ADDED : நவ 08, 2026 06:36 PM

மைசூரு: மைசூரு மண்டகள்ளி விமான நிலையம் அருகிலுள்ள கிராமத்தில் புலி நடமாடுவதால், கிராமத்தினர் அச்சமடைந்து உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் மண்டகள்ளி விமான நிலையம் அருகில் புலி தென்பட்டது.
வனத்துறையினர், புலியை பிடிக்கும் முயற்சி மேற்கொண்டும் பலனளிக்கவில்லை. சில நாட்களுக்கு பின், அதே புலி பெமல் வளாகத்தில் சுற்றித்திரிந்தது. அங்கும் புலியை பிடிக்கும் முயற்சி பலனளிக்கவில்லை.
இரண்டு மாதங்களுக்கு முன் கிராமங்களில் அடிக்கடி தென்பட்ட புலி, தற்போது ஒரு வாரமாக காலை மற்றும் மாலை வேளைகளில் பண்ணைகளையும், தோட்டங்களிலும் சுற்றித்திரிகிறது.
இதனால் கிராம மக்கள், தோட்ட உரிமையாளர்கள், தொழிலாளர்கள், பண்ணை, தோட்டங்கள் அருகில் செல்ல அஞ்சுகின்றனர்.
சில நாட்களுக்கு முன் நான்கு பசுக்களை புலி தாக்குவதை பார்த்த, விவசாயிகள், கூச்சலிட்டு விரட்டினர். இரவில் சுற்றித்திரிந்த புலி தற்போது, மண்டகள்ளி மராசே, ஹொசஹுண்டி, குடுமனஹள்ளி கிராமம், ஜே.பி., நகரை இணைக்கும் பாலம் அருகில் சுற்றித்திரிவதால் மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
வனத்துறை அதிகாரி பரமேஷ் கூறுகையில், ‘‘மராசே, அதை சுற்றி உள்ள கிராமங்களில் புலிகளின் நடமாட்டம் குறித்த தகவல் தெரிந்தது. புலியை பிடிப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,’’ என்றார்.
