/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கடலோர மாவட்டங்களை கைப்பற்ற ஹிந்துத்துவா வியூகம் வகுக்கும் து.மு.,
/
கடலோர மாவட்டங்களை கைப்பற்ற ஹிந்துத்துவா வியூகம் வகுக்கும் து.மு.,
கடலோர மாவட்டங்களை கைப்பற்ற ஹிந்துத்துவா வியூகம் வகுக்கும் து.மு.,
கடலோர மாவட்டங்களை கைப்பற்ற ஹிந்துத்துவா வியூகம் வகுக்கும் து.மு.,
ADDED : ஏப் 19, 2025 11:05 PM

மங்களூரு: கடலோர மாவட்டங்களை கைப்பற்ற ஹிந்துத்துவாவை கையிலெடுக்கும் புதிய முயற்சியில் துணை முதல்வர் சிவகுமார் இறங்கி உள்ளார்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்த அரசு சிறுபான்மையினருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், ஹிந்துக்களை பாதுகாப்பதில் அலட்சியம் காட்டுவதாகவும், பா.ஜ., தினமும் குற்றஞ்சாட்டி வருகிறது.
ஆனால் துணை முதல்வர் சிவகுமார் மட்டும், தீவிரமாக ஹிந்துத்துவாவை கடைப்பிடித்து வருகிறார். ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, கோவில்களுக்கு செல்வது என்று பக்தி மயமாக உள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளாவை, காங்கிரஸ் தலைவர்கள் விமர்சனம் செய்தபோதும், சிவகுமார் சென்று புனித நீராடினார். உத்தர பிரதேச அரசுக்கு பாராட்டும் தெரிவித்திருந்தார்.
கோவை ஈஷா மையத்தில் நடந்த சிவராத்திரி நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார். இதற்கும் கட்சிக்குள் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் எதையும் அவர் கண்டுகொள்ளவில்லை.
பலத்த அடி
கர்நாடகாவின் கடலோர மாவட்டமான தட்சிண கன்னடா, உடுப்பியில் உள்ள கோவில்களுக்கும் அடிக்கடி செல்கிறார். இதன் பின்னணி என்ன என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது 2023 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்றாலும், தட்சிண கன்னடா, உடுப்பி ஆகிய மாவட்டங்களில் பலத்த அடி வாங்கியது.
தட்சிண கன்னடாவில் உள்ள 7 தொகுதிகளில் 2 இடம் மட்டுமே காங்கிரசுக்கு கிடைத்தது. காங்கிரஸ் வெற்றி பெற்ற புத்துாரிலும், பா.ஜ., தான் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
ஹிந்து அமைப்பின் அருண் புட்டிலா சுயேச்சையாக போட்டியிட்டதால், ஓட்டுகள் பிரிந்து காங்கிரசின் அசோக்குமார் ராய் வெற்றி பெற்றுவிட்டார். உடுப்பி மாவட்டத்தில் 5க்கு 5 தொகுதியிலும் பா.ஜ., அபார வெற்றி பெற்றது.
கம்பாலா
கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், உடுப்பி தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெறும்; தட்சிண கன்னடாவில் கடும் போட்டி இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் இரண்டு தொகுதியிலும் பா.ஜ., அசத்தலான வெற்றி பெற்றது.
தட்சிண கன்னடா, உடுப்பியில் ஹிந்து அமைப்புகள் அதிகமாக உள்ளன. இதனால் அந்த இரண்டு மாவட்டங்களும் பா.ஜ.,வின் கோட்டையாக உள்ளன. இவற்றை உடைத்து இரண்டு மாவட்டங்களிலும், காங்கிரஸ் கொடியை பறக்க விட வேண்டும் என்று சிவகுமார் நினைக்கிறார். இதனால் தான் ஹிந்துத்துவாவை தீவிரமாக கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளார்.
இரண்டு மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களிடம் 'கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள்.
காங்கிரஸ் ஹிந்து விரோத கட்சி என்று, மக்கள் மனதில் பா.ஜ., விதை விதைத்துள்ளது. அதை எப்படியாவது மாற்ற வேண்டும்' என்று கூறி இருக்கிறார்.
மேலும் இரு மாவட்டங்களில் நடக்கும் கோவில் நிகழ்ச்சிகள், கம்பாலா போட்டிகளிலும் சிவகுமார் கலந்து கொள்கிறார். அவரது புதிய முயற்சிக்கு வெற்றி கிடைக்குமா என்பது 2028 தேர்தலில் தெரிந்துவிடும்.