ADDED : ஏப் 13, 2025 07:19 AM
ஆன்மிகம்
பங்குனி உத்திரம்
பங்குனி உத்திரத்தை ஒட்டி, மிதுனம் லக்னத்தில் சுப முகூர்த்தத்தில் ஸ்ரீபார்வதி - பரமசிவன் திருக்கல்யாண உத்சவம் - காலை 10:30 முதல் மதியம் 12:00 மணி வரை; அன்னதானம் - மதியம் 12:00 மணிக்கு மேல். இடம்: சுயம்பு காளி அம்மன் கோவில், ஹலசூரு மார்க்கெட்.
பக்த ஜனா சபாவின் சூர்யநமஸ்காரம் - காலை 6:00 முதல் 7:30 மணி வரை; சுப்பிரமணிய கலச பூஜை, சஹஸ்ரநாமம் அர்ச்சனை, சுப்பிரமணிய திவ்ய திரிசதி பூஜை, ஹோமம், ரித்விக்சின் பிரம்மச்சாரி பூஜை - 7:30 முதல் மதியம் 1:30 மணி வரை; புதுக்கோட்டை அபிலாஷ் மாரர், புதுக்கோட்டை உன்னிகிருஷ்ணன் மாரர் குழுவினரின் தாயம்பகம் இசை - 2:30 முதல் மாலை 5:30 மணி வரை; ஸ்ரீரவிசந்திர பாகவதர் குழுவினரின் நாமசங்கீர்த்தனம் - 6:00 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்ரீ கோதண்டராம சமுதாய பவன், ஸ்ரீராமர் கோவில் வளாகம், காச்சரகானஹள்ளி.
ராமநவமி சங்கீத உத்சவம்
ஸ்ரீகலா கல்வி சார்பில் 32ம் ஆண்டு ஸ்ரீராமநவமி சங்கீத உத்சவத்தை ஒட்டி, ரமாமணி, சந்திரசேகர், செலுவராஜு, சுகன்யா ராம்கோபாலின் கவுரவிப்பு - காலை 9:00 மணி; ரமாமணியின் பாடல், சந்திரசேகரின் வயலின் செலுவராஜுவின் மிருதங்கம், சுகன்யா ராஜகோபாலின் கடம் இசை - 10:30 மணி; சுபா சந்தோசின் பாடல், வாணி மஞ்சுநாத்தின் புல்லாங்குழல், பிரமா விகேவக்கின் வயலின், கவுசிக் ஸ்ரீதரின் மிருதுங்கம், ரகுநந்தனின் கடம் - மாலை 4:45 மணி; கலா கங்கோத்ரியின் ராஜராம் இயக்கத்தில் 'அம்மா ஓய்வு பெறபோகிறாள்' கன்னட நாடகம் - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீவாணி வித்யா கேந்திரா, பசவேஸ்வர நகர், பெங்களூரு.
ஸ்ரீராமாபியுத்யா சபா நல அறக்கட்டளை சார்பில் 135 வது ஸ்ரீராமோத்சவத்தை ஒட்டி, சீதா கல்யாணம் - காலை 10:00 மணி; பரிசாதம் வழங்கல் - மதியம் 1:00 மணி; ஸ்பூர்த்தி ராவின் பாடல், பிரசாத்தின் மிருதங்கம், ஷமித் கவுடாவின் கடம் - மாலை 6:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஆலம்மன பவன், ஸ்ரீராம்பேட், மைசூரு.
ஸ்ரீபிரசன்ன சீதாராமா கோவிலில், 109 வது ராமநவமியை ஒட்டி, அபிஷேக் ரகுராமின் பாடல், ஸ்மிதாவின் வயலின், அர்ஜுன் குமாரின் மிருதங்கம், கிரிதர் உதுபாவின் கடம் - மாலை 6:30 மணி. இடம்: கோவில் வளாகம், நாராயண சாஸ்திரி சாலை, மைசூரு.
ஸ்ரீராம சேவா மண்டலி சார்பில் 72ம் ஆண்டு ராமோற்சவம், சென்னை விவேக் சதாசிவமின் கர்நாடிக் கிளாசிக் இசை - நேரம்: மாலை 6:30 மணி. இடம்: ஸ்ரீ ஆவணி சங்கர மடம், நான்காவது பிரதான சாலை, வித்யாரண்யபுரம், மைசூரு.
ஸ்ரீ சீதா ராமா கோவிலில் பஜனை மண்டலி சார்பில் பக்தி பாடல்கள் - மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: கோவில் வளாகம், சித்தார்த்தா நகர், மைசூரு.
பொது
பொங்கல் விழா
டி.ஆர்.டி.ஓ., பொங்கல் சங்கமத்தின் 7 ம் ஆண்டு விழா. டி.ஆர்.டி.ஓ., தலைமை இயக்குனர் விஞ்ஞானி ஜெயசாந்தி, இஸ்ரோ சந்திரயான் திட்ட இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானி ஷேக் அல்தாப் பங்கேற்பு, பொங்கல் வைத்தல், கோலப்போட்டி, ஓவியம் வரைதல், இசை கச்சேரி, இசைவும், அசைவும் - காலை 7:00 முதல் பகல் 12:00 மணி வரை. இடம்: டி.ஆர்.டி.ஓ., சமுதாய கூடம், குடியிருப்பு பகுதி 1, சி.வி.ராமன் நகர்.
தமிழ் புத்தாண்டு விழா
ஆஸ்பார்ன் முதலியார் சங்கம் சார்பில் தமிழ் புத்தாண்டு விழா - காலை 10:30 முதல் மதியம் 1:30 மணி வரை. இடம்: சங்க வளாகம், ஆஸ்பார்ன் சாலை, பெங்களூரு.
மருத்துவ, வேலை வாய்ப்பு முகாம்
சமூக ஆர்வலரும், எஸ்.கே.குரூப் நிறுவன தலைவருமான எஸ்.கோமதன் ஏற்பாட்டில் 13 வது இலவச மருத்துவ சிகிச்சை முகாம் - காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை. இடம்: சந்திரா ஆங்கில உயர்நிலை பள்ளி, பிரகாஷ்நகர்; சேவாஸ்ரமம் ஆங்கில துவக்க, உயர்நிலை பள்ளி, ஸ்ரீராமபுரம்; அரசு உயர்நிலை பள்ளி, பிரகாஷ்நகர்; அரசு உயர்நிலை பள்ளி, ஸ்ரீராமபுரம், பெங்களூரு.
ஸ்ரீராமபுரம், தயானந்தநகர், பிரகாஷ்நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்காக, வேலை வாய்ப்பு முகாம் - காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை. இடம்: அம்பேத்கர் மைதானம், ஸ்ரீராமபுரம்
கர்நாடக புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பில், புகைப்பட கண்காட்சி மற்றும் கேமரா, உதிரிபாகங்கள் விற்பனை மேளா. - நேரம்: காலை 10:00 மணி முதல். இடம்: அரண்மனை மைதானத்தின் முதல் நுழைவுவாயில், பெங்களூரு.
கலாசார நிகழ்ச்சி
ஸ்ரீ மவுனீச சங்கீதம், சமஸ்கிருத அகாடமி அறக்கட்டளையின் நான்காம் ஆண்டு கலாசார நிகழ்ச்சி - மாலை 5:00 மணி. இடம்: ஸ்ரீ நாடபிரம்மா சங்கீத சபை, ஜே.எல்.பி., சாலை, மைசூரு.
நாடகம்
கொள்ளேகால் யதீஷ் இயக்கத்தில் 'என் ஊரு இந்த ஊரு' கன்னட நாடகம் - மாலை 6:30 மணி. இடம்: பூமிகீதா அரங்கம், ரங்காயனா, மைசூரு.
பயிற்சி
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி. இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை. இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
எம்பிராய்டிங் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
காமெடி
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:00 முதல் 9:10 மணி வரை. இடம்: கபே ரீசெட், ஆறாவது பிளாக், கோரமங்களா.
மிட்நைட் காமெடி - இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 12வது பிரதான சாலை, இந்திரா நகர்.
லேட் நைட் காமெடி ேஷா - இரவு 10:30 முதல் 11:45 மணி வரை. இடம்: ஸ்டார்பக்ஸ், 12வது பிரதான சாலை, இந்திரா நகர்.
லேட் நைட் காமெடி - இரவு 9:30 முதல் 11:00 மணி வரை. இடம்: டாக் காமெடி கிளப், நான்காவது பிளாக், கோரமங்களா.
காமெடி நைட்ஸ் - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், எச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட், கல்யாண் நகர்.