/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
இன்று சாமுண்டீஸ்வரி ஜெயந்தி தங்க பல்லக்கில் அம்மன் பவனி
/
இன்று சாமுண்டீஸ்வரி ஜெயந்தி தங்க பல்லக்கில் அம்மன் பவனி
இன்று சாமுண்டீஸ்வரி ஜெயந்தி தங்க பல்லக்கில் அம்மன் பவனி
இன்று சாமுண்டீஸ்வரி ஜெயந்தி தங்க பல்லக்கில் அம்மன் பவனி
ADDED : ஜூலை 16, 2025 11:03 PM

மைசூரு: மைசூரு சாமுண்டி மலையில் இன்று சாமுண்டீஸ்வரி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இம்முறை தங்க பல்லக்கில் அம்மன் பவனி வருகிறார்.
கன்னட ஆஷாடா மாதத்தில், ரேவதி நட்சத்திர நாளில், சாமுண்டீஸ்வரி அம்மன் பிறந்ததாக நம்பப்படுகிறது. அன்றைய தினம், மைசூரு மன்னர் குடும்பத்தின் குலதெய்வமான சாமுண்டீஸ்வரிக்கு ஜெயந்தி விழா கொண்டாடப்படும்.
இந்தாண்டு கோலாகலமாக கொண்டாட, மாவட்ட நிர்வாகம், சாமுண்டீஸ்வரி கோவில் ஆணையம் ஏற்பாடுகளை செய்துள்ளன.
இன்று அதிகாலை 4:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் துவங்குகின்றன. அம்மனுக்கு ருத்ராபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், சஹஸ்ரநாம அர்ச்சனை, அலங்காரம் உட்பட பல்வேறு பூஜைகள் நடக்கின்றன. அதுவரை பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதியில்லை.
மன்னர் குடும்பத்தின் பிரமோதா தேவி, அவரது மகன் யதுவீர், மனைவி திரிஷிகா குமாரி ஆகியோர் சாமுண்டி சன்னிதியில் சிறப்பு பூஜையில் பங்கேற்பர்.
காலை 8:00 மணிக்கு மேல், அம்மனை தரிசிக்க, பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். 9:00 மணிக்கு மஹா மங்களாரத்தி காண்பிக்கப்படுகிறது.
அதன் பின், தங்க பல்லக்கு உத்சவம் நடக்கிறது. தங்க பல்லக்கில் உற்சவர் வைக்கப்பட்டு, கோவிலை வலம் வருகிறார். இரவு 7:00 மணிக்கு சிம்மாசனத்தில் உற்சவரை அமர வைத்து, தர்பார் உத்சவம் நடத்தப்படுகிறது.
இன்றைய தினம் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவர் என்பதால், தனித்தனி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பிரசாதம், அன்னதானம் வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பக்தர்கள் அதிகளவில் வருகை தருவர் என்பதால், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.லலிதா மஹால் அரண்மனை மைதானத்தில் 2,000 ரூபாய், 300 ரூபாய்க்கான டிக்கெட் வழங்கப்படுகிறது. அதை வாங்கிக் கொண்ட, அரசு ஏற்பாடு செய்துள்ள இலவச பஸ்சில் பயணம் செய்யலாம்.