/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்., திருவள்ளுவர் சங்கத்தில் இன்று காமராஜர் பிறந்தநாள்
/
பெங்., திருவள்ளுவர் சங்கத்தில் இன்று காமராஜர் பிறந்தநாள்
பெங்., திருவள்ளுவர் சங்கத்தில் இன்று காமராஜர் பிறந்தநாள்
பெங்., திருவள்ளுவர் சங்கத்தில் இன்று காமராஜர் பிறந்தநாள்
ADDED : ஜூலை 26, 2025 11:02 PM
ஸ்ரீராமபுரம்:பெங்களூரு திருவள்ளுவர் சங்கம் சார்பில், காமராஜர் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
பெங்களூரு ஸ்ரீராமபுரம் தயானந்தநகர் 7வது குறுக்கு தெருவில், பெங்களூரு திருவள்ளுவர் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தின் சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 123வது ஆண்டு பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
சங்க அலுவலகத்தில் இன்று காலை 10:30 மணிக்கு துவங்கும் விழாவில், சங்க சிறப்பு விருந்தினர்களாக கர்நாடக ஹிந்து நாடார் அசோசியேஷன் செயலர் கிருஷ்ணவேணி, எஸ்.பாலகிருஷ்ணன், ஜி.ராஜேந்திரன், ஸ்ரீராமபுரம் சம்பத், ஜெ.சரவணன், கோனேன அக்ரஹாரா விஸ்வநாதன், மா.நடராஜ், முன்னாள் கவுன்சிலர் ஸ்ரீதர் ராமையா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு நோட்டு, புத்தகம், கல்வி உபகரணங்களை பெங்களூரு திருவள்ளுவர் சங்க தலைவரும், தாய்மொழி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளருமான எஸ்.டி.குமார் வழங்குகிறார். செயலர் ஆர்.பிரபாகரன் நன்றி கூறுகிறார்.