ADDED : நவ 05, 2025 12:35 AM
ஆன்மிகம் அஷ்டலட்சுமி கோவில் மண்டல பூஜை - காலை 7:00 மணி. இடம்: பெசன்ட் நகர்.
தேவி கருமாரி அம்மன் கோவில் பவுர்ணமி ஊஞ்சல் சேவை -- மாலை 6:00 மணி. இடம்: புதுநகர் 3வது தெரு, ஜல்லடியன்பேட்டை.
கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் பவுர்ணமி கிரிவலம் -- மாலை 5:30 மணி. சுவாமிக்கு அன்னாபிஷேகம் -- இரவு 7:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.
திருவேட்டீஸ்வரர் கோவில் நெடுமாற நாயனார் குரு பூஜை -- மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
ஓம் கந்தாஸ்ரமம் சகஸ்ர லிங்கத்துக்கு அன்னாபிஷேகம் -- மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
ஆதிபுரீஸ்வரர் கோவில் அன்னாபிஷேகம் -- மாலை 5:00 மணி. நெடுமாற நாயனார் குருபூஜை -- இரவு 7:00 மணி. பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
பொது கதை பேச்சு 'நான் பேசறேன் நீ கேளு' எனும் தலைப்பில் பேச்சாளர் தீபக்கின் இசையுடன் கலந்து மனதை கவர்ந்த நேரலை கதைப்பேச்சு- - இரவு 7:00 மணி, இடம்: மியூசியம் தியேட்டர், எழும்பூர்.
சொற்பொழிவு மதுரத்வனி சார்பில் மருத்துவ கல்வியாளரான சுதா சேஷய்யனின் தமிழ் மூவர் இசை சொற்பொழிவு - மாலை 6:15 மணி, இடம்: ஆர்.கே., கன்வென்ஷன் சென்டர், மயிலாப்பூர்.
முனைவர் என்.பத்ரியின் 'உறவின் உன்னதம் அறிவோம்' சொற்பொழிவு - மாலை 5:00 மணி முதல். அனுமதி இலவசம். இடம்: இரண்டாம் தளம் தமிழ் பிரிவு, அண்ணா நுாற்றாண்டு நுாலகம், கிண்டி.

