ADDED : ஆக 06, 2026 09:30 PM
ஆன்மிகம்
மண்டல பூஜை
ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்ததை ஒட்டி, மண்டல பூஜை - காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரையிலும்; மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரையிலும்; ஹோமம் - காலை 10:00 முதல் 11:00 மணி வரை; அபிஷேகம் - 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை; ஆரத்தி - மதியம் 12:30 மணி. இடம்: ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில், பாபுராயனகொப்பலு, ஸ்ரீரங்கபட்டணா, மாண்டியா.
ஆடி பிரம்மோத்சவம்
ஆடி பிரம்மோத்சவத்தை ஒட்டி அங்குரார்ப்பணம் - மாலை 5:30 மணி; கங்கண தாரணம் - இரவு 7:30 மணி. இடம்: தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜிநகர்.
ஆடி திருவிழாவை ஒட்டி, காளியம்மனுக்கு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் அலங்காரம் - இரவு 7:30 மணி. இடம்: ஸ்ரீ சுயம்பு காளியம்மன் கோவில், பஜார் தெரு, ஹலசூரு.
ஆடி கிருத்திகை
காப்பு கட்டுதல் - மாலை 4:30 மணி. இடம்: ஸ்ரீ வடவேட்டம்மன் கோவில், சிக்பஜார் சாலை, சிவாஜி நகர்.
வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் - காலை 9:30 மணி; மஹா மங்களாரத்தி, பிரசாத வினியோகம் - மதியம் 12:00 மணி. இடம்: காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜிநகர்.
கங்கன காப்பு கரகம் - காலையில். இடம்: ஸ்ரீ தெரு வீதி அம்மன் கோவில், புதுபாளையம், நான்காவது கிராஸ், சிவாஜி ரோடு, சிவாஜி நகர்.
ஆடி கரக மஹோத்சவத்தை ஒட்டி, சுத்தி புண்யாஹ வச்சனம், கோ பூஜை, கலச ஸ்தாபனை, கணபதி ஹோமம், வாஸ்து பூஜை, அஷ்டபலி பூஜை, பூர்ணாஹூதி, ரக் ஷா பந்தன், கொடியேற்றம், மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல் - காலை 7:30 முதல் 9:00 மணி வரை; முதல் நாள் கங்கை பூஜையை ஒட்டி காமராஜ் சாலையில் உள்ள ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சடாக் ஷர ஞான சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து ஊர்வலமாக வந்து, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தல் - 9:00 மணி; ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சடாக் ஷர ஞான சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பச்சை கரகம், அக்னி கரகம் ஊர்வலம் புறப்பாடு - மாலை 6:30 முதல் இரவு 8:30 மணி வரை; மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல் - இரவு 9:00 மணி. இடம்: ஸ்ரீ ரேணுகா துர்கா பரமேஸ்வரி கோவில், வீரப்பிள்ளை தெரு, பெங்களூரு.
சிறப்பு அபிஷேகம் - அதிகாலை 4:30 முதல் 6:30 மணி வரை; மஹா மங்களாரத்தி - 6:30 மணி. இடம்: சிருங்ககிரி ஸ்ரீ சண்முகர் கோவில், ராஜராஜேஸ்வரி நகர்.
புண்ய திதி ஆராதனை
குரு தேவ் சுவாமி சிவானந்தஜி மஹாராஜின் 63 வது புண்யதிதி ஆராதனையை ஒட்டி, நகர சங்கீ ர்த்தனம் - காலை 7:00 மணி; பஜனை மற்றும் படுக பூஜை - காலை 9:00 மணி; ஸ்ரீ பெல்லி மட மஹா சம்ஸ்தான மடாதிபதி பரம பூஜ்ய ஸ்ரீ வனுபவ சர மூர்த்தி மஹாசுவாமிகள் பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார் - காலை 11:00 மணி; பஜனை, அர்ச்னை, மஹா மங்களாரத்தி - மதியம் 12:00 மணி; பிரசாத வினியோகம் - மதியம் 12:30 மணி; பஜனைகள் - மாலை 6:30 மணி; குருதேவ் சுவாமி சிவானந்தா சுவாமி ஆடியோ வி ஷுவல் - இரவு 7:00 மணி; மஹா மங்களாரத்தி, பிரசாத வினியோகம் - இரவு 7:45 மணி. இடம்: தி பெங்களூரு டிவைன் லைப் சொசைட்டி, தியாகி வி ராமஞ்ஜுலு நாயுடு ரோடு, சு வாமி சிவானந்தபுரம், சிவாஜிநகர்.
லேசர் ஷோ
அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
பொது
விற்பனை, கண்காட்சி
சஹாரா கலை மற்றும் கைவினை, கைத்தறி கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மைதானம், பழைய கலெக்டர் அலுவலகம் பின்புறம், மைசூரு. தொடர்புக்கு 90351 60215, 95900 18133.
மலர் கண்காட்சி
சுதந்திர தினத்தை முன்னிட்டு, பெங்களூரு லால்பாக்கில் 12 நாட்கள் நடக்கும் மலர் கண்காட்சி துவக்கம். - காலை 9:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை.
