ADDED : ஜூலை 14, 2026 09:33 PM
ஆன்மிகம் மண்டல பூஜை ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்ததை ஒட்டி, மண்டல பூஜை - காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரை; மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை; ஹோமம் - காலை 10:00 முதல் 11:00 மணி வரை; அபிஷேகம் - 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை; ஆரத்தி - மதியம் 12:30 மணி. இடம்: ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில், பாபுராயனகொப்பலு, ஸ்ரீரங்கபட்டணா, மாண்டியா.
ஆஷாட நவராத்திரி ஸ்ரீ ஆதிசக்தி மாரியம்மன் ஸ்ரீ கல்யாண வாராஹி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரி; மஞ்சள் அலங்காரம் இரவு 7:30 மணி. இடம்: ராபர்ட்சன்பேட்டை, 4 வது பிளாக், தங்கவயல்.
லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
பொது காமராஜர் பிறந்த நாள் விழா தங்கவயல் காந்தி - காமராஜர் தேசிய மன்றத்தின் சார்பில், தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழா. காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கல் -- காலை 9:00 மணி. இடம்: ராபர்ட்சன்பேட்டை பஸ் நிலையம், தங்கவயல்.
ஆயுர்வேத சிகிச்சை முகாம் ஜே.எஸ்.எஸ். ஆயுர்வேத மருத்துவமனை சார்பில் முதுகுவலி, கழுத்து வலிக்கான அக்குபஞ்சர், யோகா முகாம் - காலையில். இடம்: மருத்துவமனை வளாகம், லலிதாத்ரிபுரா சாலை, ஆலனஹள்ளி, மைசூரு. தொடர்புக்கு 0821 - 2548231, மொபைல் எண்: 96320 00697.
