ADDED : ஜூலை 15, 2026 12:26 AM
பெங்களூரு: பெங்களூரில், 1 கிலோ பிராய்லர் கோழியின் கறி, 360 ரூபாய்; ஒரு கோழி முட்டை, 9 ரூபாய்க்கும் விற்பனையாகி அசைவ பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த வாரம், 1 கிலோ, 320 ரூபாய்க்கு விற்பனையான தோல் நீக்கிய கோழிக்கறி, நேற்று அதிகபட்சமாக, 360 ரூபாய்க்கு விற்பனையானது. அதுபோல, 1 கிலோ 300 ரூபாய்க்கு விற்பனையான தோலுடன் கூடிய கோழிக்கறி, நேற்று அதிகபட்சமாக 340 ரூபாய்க்கு விற்பனையானது. சில்லறை வணிகத்தில் கடந்த வாரம் 8 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கோழி முட்டை, நேற்று அதிகபட்சமாக, 9 ரூபாய்க்கு விற்பனையானது. இது, அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இறைச்சி விற்பனையாளர்கள் கூறுகையில், 'கர்நாடகாவிலிருந்து பிற மாநிலங்களுக்கு கோழிகள் ஏற்றுமதி செய்யப்படுவதால், பெங்களூருக்கு வரும் கோழிகளின் வரத்து கணிசமாக குறைந்து உள்ளது. இதனால், கோழிக்கறி விலை அதிகரித்து வருகிறது.இதனால், வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது'என்றனர்.
