sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இன்று இனிதாக... (25.03.2026) பெங்களூரு

 இன்று இனிதாக... (25.03.2026) பெங்களூரு

 இன்று இனிதாக... (25.03.2026) பெங்களூரு


ADDED : மார் 25, 2026 06:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2026 06:47 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

பிரம்ம ரத உத்சவம்

 ஸ்ரீ சோமேஸ்வர சுவாமி கோவில் பிரம்ம ரத உத்சவத்தை ஒட்டி, தவ்ஜரோஹனம்; நந்தி வாகனம், பஞ்சமூர்த்தி உத்சவம் - மாலை 4:00 மணி; ஊர்வலம் - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ சோமேஸ்வரர் கோவில், ஹலசூரு.

வசந்த நவராத்திரி மஹோத்சவம்

 திராயின்யாஸ் ஸ்ரீவித்யா பவுண்டேஷன் சார்பில் 17 ம் ஆண்டு வசந்த நவராத்திரி மஹோத்சவத்தை ஒட்டி, மஹா அபிஷேகம், சப்தசஷ்டி பாராயணம், லலிதோபக்யானா பாராயணம், ஸ்ரீசக்கர அர்ச்சனை - காலை 8:30 மணி; ஸ்ரீ தாச வராஹி ஹோமம் - மாலை 5:30 மணி. இடம்: பவுண்டேஷன் வளாகம், மூன்றாவது பிளாக், ஜெயலட்சுமிபுரம், மைசூரு.

பங்குதி திருவாதிரை

 பங்குதி திருவாதிரையை ஒட்டி, பிரபந்த சேவை காலம், சாத்துமுறை, மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல் - மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: ஸ்ரீபான் பெருமாள் கோவில் ஸ்ரீகிருஷ்ண மந்திர், பஜார் தெரு, ஹலசூரு.

கும்பாபிஷேகம்

 ஸ்ரீ முனீஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவச்சனம், பிம்மசுத்தி, இரண்டாவது கால யாக பூஜை, பிரதான கலச ஊர்வலம், - காலை 6:30 மணி; முனீஸ்வர சுவாமி விமான கோபுரம் கும்பாபிஷேகம், மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம் - காலை 9:15 மணி முதல 10:25 மணி வரை; மஹா மங்களாரத்தி, அன்னதானம் - மதியம் 12:00 மணி. இடம்: ஸ்ரீ முனீஸ்வர சுவாமி கோவில், தொட்டகுன்டே, காக்ஸ்டவுன்.

சொற்பொழிவு

 ஆண்டாள் மந்திரம் சார்பில் பெங்களூரு வேதாந்தா மையத்தின் நிறுவனர் ஈஸ்வரனின் 'ஸ்ரீபகவத் கீதை' சொற்பொழிவு - மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஆண்டாள் மந்திரம், கோவில் தெரு, வி.வி.மொஹல்லா, மைசூரு. தொடர்புக்கு: 90358 96665.

ராமோத்சவா

 ஸ்ரீ கணபதி சேவா மண்டலி அறக்கட்டளை சார்பில் ஏழாம் ஆண்டு ராமோத்சவத்தை ஒட்டி, சுவர்ணாஜலி சங்கீத சாலையின் இசை நிகழ்ச்சி - மாலை 6:30 மணி; கிருபா பட்கே குழுவினரின் 'பாவயாமி ரகுராமம்' நிருத்ய வைபமம் - இரவு 7:00 முதல் 8:30 மணி வரை. இடம்: கணபதி கோவில், முதல் பிளாக், ராமகிருஷ்ணா நகர், மைசூரு.

ராம நவமி விழா

 மலர் அலங்காரம், அர்ச்சனை, மகா மங்களாரத்தி, பிரசாத வினியோகம் - காலை 5:00 மணி; ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி - சீதாதேவி திருக்கல்யாணம் - காலை, 10:00 மணி முதல்; பானகம், மோர், பயிறு வகைகள் பிரசாத வினியோகம் - காலை, 11:00 மணி; அன்னதானம் - பகல் 1:00 மணி; நிவேதனம் பிரசாதம் -மாலை 5:00 மணி; மெல்லிசை கச்சேரி - மாலை 6:00 மணி; இடம்: ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி திருக்கோவில், பி.எம்.சாலை, ஆண்டர்சன் பேட்டை, தங்கவயல்.

 அபிஷேகம், புஷ்ப அலங்காரம் சிறப்பு பூஜைகள் பிரசாத விநியோகம் காலை 10:00 மணி; பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமி உற்சவம் - மாலை 6:00 மணி. இடம்: ஸ்ரீ வீர ஆஞ்சநேய சுவாமி கோவில் சொர்ண குப்பம் ராபர்ட்சன் பேட்டை.

லேசர் ஷோ

 அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது

இலவச மருத்துவ முகாம்

 ஜே.எஸ்.எஸ்., ஆயுர்வேத மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் - காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை. இடம்: மருத்துவமனை வளாகம், லலிதாத்ரிபுரா சாலை, ஆலனஹள்ளி, மைசூரு. தொடர்புக்கு: 0821 - 2548 231, 87624 09110.

நடனம்

 எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.

சமையல் பயிற்சி

 ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

பயிற்சி

 இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.

 ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

 களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

 ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.

இசை

 லேடிஸ் நைட்ஸ் - இரவு 8:00 முதல் 12:00 மணி வரை. இடம்: நோ லிமிட்ஸ் லாஞ்சு அண்ட் கிளப், 2வது தளம், அல்லய்டு பிளாசா, மக்ரத் சாலை, அசோக் நகர்.

 கன்னடா ஜாமிங் - மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 95, லோடஸ் பில்டிங், மூன்றாவது தளம், 17 வது குறுக்கு சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

 தெலுங்கு ஜாமிங் - மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை மற்றும் 8:00 முதல் 9:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us