ADDED : மார் 29, 2026 03:22 AM
ஆன்மிகம்
பிரம்ம ரத உத்சவம்
ஸ்ரீ சோமேஸ்வர சுவாமி கோவில் பிரம்ம ரத உத்சவத்தை ஒட்டி, கல்யாண உத்சவம், விருஷப வாகனம், பஞ்சமூர்த்தி உத்சவம் - மாலை 4:00 மணி. இடம்: ஸ்ரீ சோமேஸ்வரர் கோவில், ஹலசூரு.
ஸ்ரீ ராம நவமி
ஸ்ரீவாணி கலா கேந்திரா சார்பில் 33ம் ஆண்டு ராமநவமி சங்கீத உத்சவத்தை ஒட்டி, அர்ஜுன் சாம்பசிவன், நாராயணனின் பியானோ, பனீந்திர பாஸ்கரின் மிருதங்கம், ரகுநந்தனின் கடம் - மாலை 4:15 மணி; சிக்கில் குருசரணின் பாடல், சாருலதா ராமானுஜத்தின் வயலின், சுதீந்திராவின் மிருதங்கம், கிரிதர் உடுபாவின் கடம் - மாலை 6:30 மணி. இடம்: ஸ்ரீ வாணி வித்யா கேந்திரா, பசவேஸ்வர நகர், பெங்களூரு.
வசந்த நவராத்திரி மஹோத்சவம்
திராயின்யாஸ் ஸ்ரீவித்யா பவுண்டேஷன் சார்பில் 17 ம் ஆண்டு வசந்த நவராத்திரி மஹோத்சவத்தை ஒட்டி, மஹா அபிஷேகம், சப்தசஷ்டி பாராயணம், லலிதோபக்யானா பாராயணம், ஸ்ரீசக்கர அர்ச்சனை - காலை 7:00 மணி; ஸ்ரீ சங்கரஹ மகா நவசண்டி யாகம் - 10:00 மணி; பூர்ணாஹூதி, பலிஹாரனா, மஹாமங்களாரத்தி - மதியம் 1:00 மணி. இடம்: பவுண்டேஷன் வளாகம், மூன்றாவது பிளாக், ஜெயலட்சுமிபுரம், மைசூரு.
பங்குனி உத்திரம்
சமர்ப்பணம் அமைப்பு சார்பில் பங்குனி உத்திரம் எனும் 12வது உத்திரம் விளக்கு உத்சவத்தை ஒட்டி, பெங்களூரு பக்த ஜன சபாவின் சூர்யநமஸ்காரம் - காலை 6:00 முதல் 7:30 மணி வரை; மாலா ராமகிருஷ்ணன் தலைமையிலான லலிதா மஹா வித்யா மண்டலியின் நாராயணீயம் - 8:00 முதல் மதியம் 1:00 மணி மற்றும் 2:00 முதல் 3:30 மணி வரை; கேரளாவின் புதுகோட் மாரர் குழுவினரின் திரிப்பில் தாயம்பகம் - மாலை 4:00 முதல் 5:45 மணி வரை; சென்னை ஸ்ரீ கோபால வள்ளி தாசின் 'ஸ்ரீ கிருஷ்ணா கிருபா' சொற்பொழிவு - மாலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: ஸ்ரீ கோதண்டராம சமுதாய பவன், ஸ்ரீராம கோவில் வளாகம், ஈஸ்கான் எச்.பி.ஆர்., லே - அவுட், காச்சரகானஹள்ளி, பெங்களூரு.
லேசர் ஷோ
அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
லட்சார்ச்சனை
லட்ச லலித சஹஸ்ரநாம அர்ச்சனை, சண்டி மஹா யாகத்தை ஒட்டி, கணபதி பூஜை, புண்யாஹவசனம் ஆராதனை - காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை மற்றும் மாலை 5:00 முதல் இரவு 7:30 மணி வரை; மஹா மங்களாரத்தி - மதியம் 12:00 மற்றும் இரவு 8:00 மணி. இடம்: ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர்.
குருத்தோலை ஞாயிறு
குருத்தோலை ஞாயிறு முன்னிட்டு, தமிழில் - காலை 8:00 மணி; கன்னடத்தில் குருத்தோலை ஞாயிறு, ஊர்வலம் - 9:30 மணி. இடம்: துாய ஆரோக்கிய அன்னை தேவாலயம், சிவாஜி நகர்.
கன்னடத்தில் - காலை 6:15 மணி; ஆங்கிலத்தில் 7:30, 10:00, மாலை 6:00 மணி; தமிழில் 8:45 மணி; மலையாளத்தில் திருப்பலி ஊர்வலம் - மாலை 4:15 மணி. இடம்: உயிர்த்தெழுதல் தேவாலயம், இந்திரா நகர்.
கன்னடத்தில் - காலை 8:00, மாலை 5:15 மணி; ஆங்கிலத்தில் - காலை 5:30, 9:30, மதியம் 12:15, மாலை 6:30 மணி; தமிழில் குருத்தோலை ஞாயிறு - காலை 6:30, 10:45 மணி. இடம்: துாய ஆவியார் தேவாலயம், ரிச்சர்ட்ஸ் டவுன், பெங்களூரு.
பொது
இலவச மருத்துவ முகாம்
ஜே.எஸ்.எஸ்., ஆயுர்வேத மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் - காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை. இடம்: மருத்துவமனை வளாகம், லலிதாத்ரிபுரா சாலை, ஆலனஹள்ளி, மைசூரு. தொடர்புக்கு: 0821 - 2548 231, 87624 09110.
நடனம்
எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.
சமையல் பயிற்சி
ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
பயிற்சி
இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
இசை
ஏஸ் ஆப் ஸ்பேட்ஸ் - இரவு 8:00 முதல் 10:00 மணி வரை. இடம்: சின் லுங் பிரிவெரி, 1135, 100 அடி சாலை, இந்திரா நகர்.
லேடிஸ் நைட்ஸ் - இரவு 8:00 முதல் 12:00 மணி வரை. இடம்: நோ லிமிட்ஸ் லாஞ்சு அண்ட் கிளப், 2வது தளம், அல்லய்டு பிளாசா, மக்ரத் சாலை, அசோக் நகர்.
கன்ன டா ஜாமிங் - மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 95, லோடஸ் பில்டிங், மூன்றாவது தளம், 17 வது குறுக்கு சாலை, எச். எஸ்.ஆர்., லே - அவுட்.
தெலுங்கு ஜாமிங் - மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை மற்றும் 8:00 முதல் 9:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.
காமெடி
ஜோக்ஸ் நைட் - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டன்ஸ், சர்ச் தெரு, அசோக் நகர்.
டூ பீஸ் காமெடி - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, 15வது குறுக்கு, 100 அடி வட்ட சாலை, நான்காவது பேஸ், ஜே.பி., நகர்.
டில்லி வெர்சஸ் பெங்களூரு - இரவு 8:30 முதல் 9:50 மணி வரை. இடம்: டேக் காமெடி கிளப், 1022, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.
