ADDED : ஏப் 05, 2025 02:23 AM
ஆன்மிகம்
பங்குனி திருவாதிரை
பங்குனி திருவாதிரையை ஒட்டி, ராமானுஜருக்கு அபிஷேகம், பிரபந்த சேவா காலம், சாத்துமுறை, மங்களாரத்தி - காலை 9:00 முதல் 10:30 மணி வரை. இடம்: ஸ்ரீபான் பெருமாள் கோவில் ஸ்ரீகிருஷ்ணா மந்திர், பஜார் தெரு, ஹலசூரு.
ராமநவமி சங்கீத உற்சவம்
ஸ்ரீகலா கல்வி சார்பில் 32ம் ஆண்டு ஸ்ரீராமநவமி சங்கீத உற்சவத்தை ஒட்டி, உப்பலப்பு சீனிவாசுவின் மாண்டலின், அனிருத்தா பரத்வாஜின் வயலின், ஸ்ரீகாந்தின் மிருதங்கம், ஷரத் கவுசிக்கின் கடம் - மாலை 4:45 மணி. இடம்: ஸ்ரீவாணி வித்யா கேந்திரா, பசவேஸ்வர நகர், பெங்களூரு.
ஸ்ரீ ராமசேவா மண்டலி நல அறக்கட்டளை சார்பில் அங்குஷ் கடபாவின் புல்லாங்குழல் - மாலை 5:15 முதல் 6:15 மணி வரை; மைசூரு சந்தன் குமாரின் புல்லாங்குழல், சிந்து சுசேத்தனின் வயலின், சுதீந்திராவின் மிருதங்கம், ராமானுஜனின் கடம் - 6:15 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: ஸ்ரீபிரசன்ன பார்வதி கல்யாண மண்டபம், வொன்டிகொப்பால், மைசூரு.
ஸ்ரீசங்கர ஜெயந்தி சபா சார்பில் ராமநவமிவை ஒட்டி, அபிஷேகம், அர்ச்சனை, பூஜைகள் - காலை 9:30 மணி; மஹா மங்களாரத்தி - 11:30 மணி; ஹரிஷ் பண்டவின் சாக்சபோன் இசை - மாலை 5:00 முதல் 6:30 மணி வரை. இடம்: சமுதாய பவன், தெங்கின தோட்டம், 2வது பிரதான சாலை, சரஸ்வதிபுரம், மைசூரு.
அபிஷேகம், புஷ்ப அலங்காரம், சிறப்பு ஆராதனை --- காலை:8:00 மணி; அபய ஹஸ்த ஆஞ்சநேயர் உத்சவம் - இரவு:8:00 மணி. இடம்: மஹாலட்சுமி சத்யநாராயணா சமேத ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி கோவில், சுவர்ண குப்பம், ராபர்ட்சன்பேட்டை.
முதலாம் ஆண்டு பிரம்மோத்சவம்
சுப்ரபாதம், பிரபந்த பாராயணம், வேத பாராயணம், துவார ரோஹண ஆராதனை, சிறப்பு தன்வந்திரி ஹோமம், மூல மந்திரஹோமம், லகு பூர்ணாஹுதி மந்திரம், புஷ்பா சதுர்மறை, சிறப்பு கருட வாகனம் - காலை:7:00 மணி; சகஸ்ரநாம பாராயணம், வேத பாராயணம், மாலை:4:00 மணி: வாத்திய இசை, ஆகம சாலை கலச ஆராதனா, மூலமந்திரம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பரிவார ஹோமம், லகு பூர்ணாஹுத்தி மந்திரம், பஜனை நிகழ்ச்சி, மாலை:6:00 மணி, இடம்: ஸ்ரீ பிரசன்ன லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், கோரமண்டல், தங்கவயல்.
வசந்த நவராத்திரி
டிராயின்யாஸ் ஸ்ரீவித்யா பவுண்டேஷன் சார்பில் 16வது வசந்த நவராத்திரி மஹோற்சவம், மஹா அபிஷேகம், சபத்மஸ்தி பாராயணம், ஸ்ரீ சக்கர அர்ச்சனை, நவவர்ணா பூஜை - காலை 8:30 மணி; ஸ்ரீதாச மஹாவித்யா ஹோமம், ஸ்ரீ மஹா லட்சுமி ஹோமம் - மாலை 5:30 மணி. இடம்: டிராயின்யாஸ், எண் 8, ஏழாவது பிரதான சாலை, மூன்றாவது பிளாக், ஜெயலட்சுமிபுரம், மைசூரு.
பொது
ஆலோசனை கூட்டம்
தங்கவயல் தாலுகா நிர்வாகம் சார்பில் ஜெகஜீவன்ராம் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் குறித்து ஆலோசனை கூட்டம்; காலை 10:00 மணி, இடம்:நகராட்சி அலுவலகம், ராபர்ட்சன்பேட்டை.
ஜெகஜீவன் ராம் பிறந்த நாள்
மாவட்ட நிர்வாகம், மாவட்ட பஞ்சாயத்து, மைசூரு மாநகராட்சி, சமூக நலத்துறை சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜெகஜீவன் ராம் 118 வது பிறந்த நாளில் மாலை அணிவித்தல் - காலை 9:30 மணி, சிட்டி ரயில் நிலையம் முன்; கலை நிகழ்ச்சிகள் - 11:00 மணி. இடம்: கலாமந்திர், மைசூரு.
பருப்பு மேளா
சமாஜ் சம்ருதா விஸ்வா ஆக்ரோ டெக் அண்டு பயோ டெக் சார்பில் 'பருப்பு மேளா' - காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: நஞ்சராஜ பகதுார் சவுத்ரி, வினோபா சாலை, மைசூரு.
கைவினை கண்காட்சி
சஹாரா கலை, கைவினை பொருட்கள் கண்காட்சி - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அன்ட் கைட்ஸ் மைதானம், மைசூரு.
பயிற்சி
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி. இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை. இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
எம்பிராய்டிங் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
காமெடி
ஸ்டாண்ட் அப் காமெடி - மாலை 4:00 முதல் 5:00 மணி வரை மற்றும் 6:30 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: விவேக் ஆடிடோரியம், 4, 31வது குறுக்கு சாலை, நான்காவது பிளாக், ஜெயநகர்.
கெல்ட் ஸ்டாண்ட் அப் காமெடி - மாலை 6:00 முதல் 10:00 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, தீனா காம்ப்ளக்ஸ், முதல் தளம், பிரிகேட் சாலை.
டிரிப்லிங்க் காமெடி - இரவு 7:30 முதல் 9:00 மணி வரை. இடம்: பெங்களூரு இன்டர்நேஷனல் மையம், ஏழாவது, நான்காவது பிரதான சாலை, தொம்மலுார்.
கிரை டாடி காமெடி ஷோ - மாலை 4:00 முதல் 5:30 மணி வரை மற்றும் 6:30 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: அல்லியன்ஸ் பிரான்சைஸ் டி பெங்களூரு, திம்மையா சாலை, வசந்த் நகர்.
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திஷா, 15வது குறுக்கு சாலை, 100 அடி சாலை, ஜே.பி., நகர்.
ஜோக்ஸ் ஆஜ் கல் - நேரம்: இரவு 8:30 முதல் 10:00 மணி வரை. இடம்: தி மேட் பங்கர், 618, பேஸ்மென்ட், இரண்டாவது பிரதான சாலை, இந்திரா நகர்.
ஸ்டாண்ட் அப் காமெடி - நேரம்: இரவு 11:00 முதல் அதிகாலை 12:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டென்ஸ், இரண்டாவது தளம், சாந்தாலா நகர்.
லேட் நைட் காமெடி ஷோ - இரவு 10:15 முதல் 11:30 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, வுட்டன் ஸ்டிரீட், 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.
ஆங்கில ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 9:00 முதல் 10:15 மணி வரை. இடம்: கபே முஸ்ரிஸ், 49, ஒன்பதாவது பிரதான சாலை, முதல் ஸ்டேஜ், இந்திரா நகர்.

