ஆன்மிகம்
சொற்பொழிவு
ஸ்ரீராகவேந்திர சுவாமி சேவா சமிதி சார்பில் ஸ்ரீபாதராயனாச்சார்யாவின் 'ஸ்ரீமத் பகவத் கீதை' சொற்பொழிவு - மாலை 5:00 மணி. இடம்: ஸ்ரீராகவேந்திர சுவாமி மடம் வளாகம், ஜெயலட்சுமிபுரம், மைசூரு.
லேசர் ஷோ
அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
சிற்றாலய 28 ம் ஆண்டு விழா
பிரார்த்தனை ஜெபம்- மாலை 5:00 மணி; மாதாவின் கொடி ஏற்றல், இனிப்பு வழங்கல்- மாலை 6:30 மணி, இடம்: வேளாங்கண்ணி சிற்றாலயம், சிவராஜ் நகர், உரிகம், தங்கவயல்.
பொது
ஆரோக்கியமான குழந்தைகள் போட்டி
குழந்தைகள் தினத்தை ஒட்டி, ரோட்டரி மைசூரு வடக்கு, இன்னர் வீல் மைசூரு வடக்கு இணைந்து 3 வயது வரையிலான ஆரோக்கியமான குழந்தை போட்டி நடத்துகிறது - காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை. இடம்: ரோட்டரி பவன், விஜயநகர் ரயில்வே லே - அவுட், மைசூரு.
விவசாய மேளா
பெங்களூரு வேளாண் பல்லைக்கழகம், விவசாயம், தோட்டக்கலை, பட்டுக்கூடு, வனம், கால்நடை, மீன் வளம், பெண்கள், குழந்தைகள் நலத்துறைகள், கர்நாடக பால் கூட்டமைப்பு சார்பில் விவசாய மேளா - காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: காந்தி வேளாண் அறிவியல் மையம், ஹெப்பால், பெங்களூரு.
பழமையான கார் கண்காட்சி
தட்சிண கன்னடா தர்மஸ்தலா கோவில் தர்மாதிகாரி வீரேந்திர ஹெக்டே பயன்படுத்திய பழங்கால கார்கள் கண்காட்சி - காலை 11:00 மணி மற்றும் 'பண்டித் பைக்கர்ஸ்' சாகச பைக் குழுவினரின் ஸ்ண்ட் காட்சி - மாலை 4:00 முதல் 5:00 மணி வரை. இடம்: ஆட்டோ ஷோ, அரண்மனை மைதானம், திரிபுரவாசினி, மேக்ரிய சதுக்கம், பெங்களூரு.
அடிக்கல் நாட்டு விழா -
அரசு முதல் நிலைக் கல்லூரியில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா. காலை: 9:30 மணி-, இடம்: அரசு முதல் நிலைக் கல்லூரி, பங்காரு திருப்பதி, குட்டஹள்ளி, தங்கவயல்.
காகித பொம்மை கண்காட்சி
காகித பொம்மை கலைஞர் ராகவேந்திராவின், ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் மகிகை மற்றும் ஸ்ரீகிருஷ்ண பால லீலைகளை, காகித பொம்மைகள் மூலம் விளக்குகிறார் - காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை; மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: இன்சாரா கலாசேத்திரா, நான்காவது குறுக்கு, மூன்றாவது பிரதான சாலை, மஹாதேஸ்வர நகர், விஜயநகர், மைசூரு.
தசரா கண்காட்சி
கர்நாடக கண்காட்சி ஆணையம் சார்பில் தசரா கண்காட்சி - மாலை 3:00 முதல் இரவு 10:00 மணி வரை, இடம்: தசரா கண்காட்சி மைதானம், மைசூரு.
நடனம்
எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.
சமையல் பயிற்சி
ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
பயிற்சி
இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
இசை
பஞ்சாபி நைட்ஸ் - இரவு 8:00 முதல் அதிகாலை 12:00 மணி வரை, இடம்: ஒயிட் லோடஸ் கிளப், 26, ஹரலுார் பிரதான சாலை, அம்பலிபுரா.
குளோ இன் தி டார்க் - இரவு 9:45 முதல் அதிகாலை 1:00 மணி வரை, இடம்: ஸ்கை டெஸ்க் பை ஷெர்லாக், 52, மஹாத்மா காந்தி சாலை, சாந்தாலா நகர், அசோக் நகர்.
நியூக்லியா - இரவு 7:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை, இடம்: சன்பர்ன் யூனியன், கே.எச்.பி., கிராமம், கோரமங்களா.
மேட் மேக்ஸ் - மாலை 6:00 முதல் அதிகாலை 12:00 மணி வரை, இடம்: ஜி.ஒய்.எல்.டி., 22, ஹென்னுார் - பேகூர் பிரதான சாலை, பெங்களூரு.
லெட்ஸ் டாக் - மாலை 6:30 முதல் இரவு 10:30 மணி வரை, இடம்: பெங்களூரு மாரியட் ஹோட்டல், 75, எட்டாவது சாலை, ஒயிட்பீல்டு.
காமெடி
டைம் டூ லகேகா - மாலை 5:00 முதல் 6:30 மணி வரை, இடம்: ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப், இரண்டாவது தளம், பிரிகேட் சாலை, அசோக் நகர்.
ஹல்கி ஹல்கி படி - இரவு 7:00 முதல் 8:30 மணி வரை, இடம்: புளூம் கிரியேடிவ் ஜோன், 24வது பிரதான சாலை, இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
கன்னட காமெடி - மதியம் 3:30 முதல் மாலை 5:00 மணி வரை மற்றும் 6:00 முதல் இரவு 7:30 மணி வரை, இடம்: சுக்ரா ஆடிட்டோரியம், 36, 15வது குறுக்கு, மல்லேஸ்வரம் மேற்கு.
டெசி ஜோக் ஜங்ஷன் - இரவு 8:30 முதல் 10:00 மணி வரை, இடம்: சோல் ஸ்டேஜ், 1,791, இரண்டாவது தளம், 19வது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
பம்புள் பம்புள் - இரவு 9:00 முதல் 10:30 மணி வரை, இடம்: டாக் ஓவர் டேபிள், எட்டாவது குறுக்கு சாலை, எச்.ஏ.எல். மூன்றாவது ஸ்டேஜ், ஜீவன் பீமா நகர்.
மிட்நைட் காமெடி - இரவு 11:00 முதல் அதிகாலை 12:10 மணி வரை, இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டன்ஸ், இரண்டாவது தளம், சர்ச் தெரு.
லேட் நைட் காமெடி ஷோ - இரவு 10:30 முதல் 11:45 மணி வரை, இடம்: ஸ்டார்பக் இந்திரா நகர், 721, சின்மயா மிஷன் ஹாஸ்பிடல் சாலை, முதல் ஸ்டேஜ், இந்திரா நகர்.

