ஆன்மிகம்
மண்டல மகர விளக்கு
மண்டல - மகர விளக்கு மஹோத்சவத்தை ஒட்டி, மாலை அணிவித்தல், சிறப்பு பூஜை - அதிகாலை 5:30 மணி. இடம்: ஸ்ரீ அய்யப்பன் கோவில், சாமண்ணா கவுடா லே - அவுட், ஹலசூரு, தொடர்புக்கு: 080 - 8554 9723.
லேசர் ஷோ
அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
ஹனுமன் ஜெயந்தி மஹோத்சவம்
ஹனுமன் ஜெயந்தி மஹோத்சவத்தை ஒட்டி, ஸ்ரீ சீதா ராமா கல்யாண மஹோத்சவம் - காலை 9:30 மணி; ஹர்ஷிதாவின் சுகம சங்கீதம் - மாலை 5:30 மணி; ரக் ஷித் பிரசாத் குழுவினரின் மாண்டலின் இசை நிகழ்ச்சி - இரவு 7:00 முதல் 9:30 மணி வரை. இடம்: ஸ்ரீ கேட்டே ஆஞ்சநேய சுவாமி கோவில், அரண்மனை வடக்கு நுழைவு வாயில், மைசூரு.
பொது
தமிழ் புத்தக திருவிழா
கர்நாடக பத்திரிகையாளர் சங்கம் சார்பில் நான்காம் ஆண்டு தமிழ் புத்தக திருவிழாவில், வெற்றி அரங்கம், பரிசுகளை வழங்கி வழிகாட்டுரை, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேத்தி வக்கீல் நாகூர் ரோஜா - மாலை 3:00 முதல் 3:30 மணி வரை; நம்ம ஊர் தமிழ் மக்கள் குழுவினரின் சிலம்பாட்ட அரங்கம், விகடன் குழுமம் கட்டுரையாளர் நித்யகல்யாணி, ஆராய்ச்சியாளர் தனசீலன் தங்கவேலு - மாலை 5:00 முதல் 6:00 மணி வரை; 'புத்தகமே பேசு' என்ற தலைப்பில் சிந்தனைக்களம், துாய்மை இந்தியா திட்டம் மாநில திட்ட இயக்குனர் செல்வமணி, திரைப்பட இயக்குனர் பாக்யராஜ் - 6:00 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியர்ஸ், 3, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வீதி, இந்தியன் எக்ஸ்பிரஸ் எதிரில், வசந்த் நகர்.
இசை நிகழ்ச்சி
ரக் ஷிதா ரமேசின் வீணை, ஆதம்ய ராமானந்தாவின் மிருதங்கம் இசை நிகழ்ச்சி - மாலை 6:00 மணி. இடம்: ஞானபாரதி வீணை சேஷனா பவன், ஆதிசுஞ்சனகிரி சாலை, குவெம்பு நகர், மைசூரு.
மைசூரு ஆங்கில நாடக திருவிழா
மைசூரு ஆங்கில நாடக போரம் சார்பில் மைசூரு ஆங்கில நாடக திருவிழா துவக்கம் - மாலை 5:00 மணி. இடம்: ஜெகந்நாத் சென்டர் ஆப் ஆர்ட்ஸ் அண்ட் கல்சர், முதல் ஸ்டேஜ், விஜயநகர், மைசூரு.
தசரா கண்காட்சி
கர்நாடக கண்காட்சி ஆணையம் சார்பில் தசரா கண்காட்சி - மாலை 3:00 முதல் இரவு 10:00 மணி வரை, இடம்: தசரா கண்காட்சி மைதானம், மைசூரு.
நடனம்
எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.
சமையல் பயிற்சி
ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
பயிற்சி
இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
இசை
பாலிவுட் நைட்ஸ் - மாலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.
பார்ட்டி அட் கின்சா - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: கின்சா கிளப் கோரமங்களா, 27, நான்காவது 'பி' குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
டிப்சி பாலிவுட் ஹிப் ஹாப் - இரவு 8:00 முதல் அதிகாலை 12:00 மணி வரை. இடம்: நோ லிமிட்ஸ் லாஞ்சு கிளப், அல்லய்டு கிராண்ட் பிளாசா, இரண்டாவது தளம், மக்ரத் சாலை, அசோக் நகர்.
காமெடி
காமெடி நைட்ஸ் - இரவு 8:30 முதல் 9:30 மணி வரை. இடம்: 80 அடி சாலை, எஸ்.டி., பெட், நான்காவது பிளாக், கோரமங்களா.
ஜோக்ஸ் ஆஜ் கல் - இரவு 9:00 முதல் 10:15 மணி வரை. இடம்: பங்கர் காமெடி கிளப், 618, இரண்டாவது பிரதான சாலை, ஹொய்சாலா நகர், இந்திரா நகர்.
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 9:30 முதல் 11:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டன்ஸ், இரண்டாவது தளம், சர்ச் தெரு, அசோக் நகர்.
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 9:00 முதல் 10:20 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1,018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.

