sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 27, 2026 ,தை 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 இன்று இனிதாக...

/

 இன்று இனிதாக...

 இன்று இனிதாக...

 இன்று இனிதாக...


ADDED : ஜன 25, 2026 05:15 AM

Google News

ADDED : ஜன 25, 2026 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

ஆண்டாள் திருக்கல்யாணம்

 ஆண்டாள் திருக்கல்யாணத்தை ஒட்டி, நாலாயிர திவ்ய பிரபந்தம் சேவா காலம் - காலை 8:30 முதல் 9:30 மணி வரை; ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் - 9:30 முதல் 11:30 மணி வரை; நுாறு தடா உத்சவம் - மதியம் 12:00 மணி; சாத்துமுறை, மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல், அன்னதானம் - 12:00 முதல் 12:30 மணி வரை. இடம்: ஸ்ரீ பான் பெருமாள் கோவில் ஸ்ரீ கிருஷ்ணா மந்திர், பஜார் தெரு, ஹலசூரு.

ரதசப்தமி

 ரதசப்தமியை ஒட்டி, ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், சகஸ்ர நாம அர்ச்சனை - காலை 10:00 மணி. இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர்.

 தங்க குதிரைபூட்டிய வெள்ளி ரதத்தில் ஸ்ரீ ராமசந்திர சுவாமி சூர்யபிரபா வாகன பிரகார உத்சவம் - காலை 6:00 மணி; சேஷவாகன உத்சவம் - 8:00 மணி; ஹனுமந்த வாகன உத்சவம் - 9:00 மணி; சிம்ஹ வாகன உத்சவம் - 10:00 மணி; கருட வாகன உத்சவம் - 11:30 மணி; கஜ வாகன உத்சவம் - மதியம் 12:30 மணி; மஹாமங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல் - 1:30 மணி; அஷ்வ வாகன உத்சவம் - மாலை 4:30 மணி; சந்திரமண்டல வாகன உத்சவம் - 5:30 மணி; ஸ்ரீராமசந்திர சுவாமிக்கு ரத்னஅங்கி அலங்காரம், தாவன உத்சவம் - 6:30 மணி; மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் -- இரவு 8:30 மணி. இடம்: ஸ்ரீராமுலா சன்னிதி, சிவாஜி நகர்.

லேசர் ஷோ

 அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பெருவிழா

 துாய ஆவியார் ஆலயத்தில் இடைவிடா சகாய அன்னையின் ஆண்டு பெருவிழாவை ஒட்டி, காலை ஆங்கில திருப்பலி - 5:45 மணி; தமிழில் திருப்பலி - 6:45 மணி; கன்னடத்தில் திருப்பலி - 8:15 மணி; ஆங்கிலத்தில் திருப்பலி - 9:30 மணி; மாலையில் தமிழில் திருப்பலி - மதியம் 2:30 மணி; ஆங்கிலத்தில் - 3:30 மணி; கன்னடத்தில் திருப்பலி - இரவு 7:00 மணி; ஆடம்பர தேர்பவனி - மாலை 5:00 மணி. இடம்: துாய ஆவியார் ஆலயம், ரிச்சர்ட்ஸ் டவுன், பெங்களூரு.

பொது

தேசிய வாக்காளர் தினம்

 மாநில தேர்தல் கமிஷன் சார்பில் தேசிய வாக் காளர் தினம் - காலை 11:00 மணி. இடம்: ஸ்ரீ புட்ண்ண செட்டி டவுன் ஹால், பெங்களூரு.

ஹிந்து சமூக விழா

 சங்கராபுரம் ஹிந்து சமாஜோத்சவா ஏற்பாட்டு குழு சார்பில் ஹிந்து சமூக விழாவை ஒட்டி, கெம்பே கவுடா ஊர்வலம் - மதியம் 2:30 மணி; கலாசார நிகழ்ச்சி - மாலை 4:00 மணி. இடம்: துயபானு கலா சங்கம் விளையாட்டு மைதானம், புல் டெம்பிள் சாலை, கெம்பே கவுடா நகர், பெங்களூரு.

 பெங்களூரு தெற்கு மாவட்ட பா.ஜ., முன்னாள் தலைவர் ரமேஷ் தலைமையில் ஹிந்து சமூக விழா - மாலை 5:30 மணி. இடம்: ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானம், எடியூர், ஜெயநகர்.

 பாரத மாதா பூஜை, கீதை பாராயணம் - காலை 9:00 மணி; மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் - 10:30 மணி. இடம்: ஸ்ரீ சதாசிவன் கோவில், சதா சிவன் கோவில் சாலை, ஆர்.எஸ்.,பாளையா, லிங்கராஜபுரம்.

மலர் கண்காட்சி

 தோட்டக்கலை துறை சார்பில் குடியரசு தினத்தை ஒட்டி, 219 வது மலர் கண்காட்சி - காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: கண்ணாடி மாளிகை, லால்பாக் பூங்கா, பெங்களூரு.

நடனம்

 எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.

சமையல் பயிற்சி

 ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

பயிற்சி

 இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.

 ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

 களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

 ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.

இசை

 கன்னடா மற்றும் இந்தி ஜாமிங் - மாலை 6:00 முதல் 8:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.

 வைல்டு டே - இரவு 9:00 முதல் அதிகாலை 12:00 மணி வரை. இடம்: கின்சா கிளப் கோரமங்களா, 27, நான்காவது குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

காமெடி

 டில்லி வெர்சஸ் பெங்களூரு - இரவு 8:30 முதல் 9:30 மணி வரை. இடம்: டேக் காமெடி கிளப், 80 அடி சாலை, எஸ்.டி.பெட், நான்காவது பிளாக், கோரமங்களா.

 காமெடி நைட் - இரவு 7:00 முதல் 10:30 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, தீனா காம்ப்ளக்ஸ், பிரிகேட் சாலை, அசோக் நகர்.






      Dinamalar
      Follow us