ஆன்மிகம்
சண்டி மஹாயாகம்
லட்ச லலித சஹஸ்ரநாம அர்ச்சனை, சண்டி மஹா யாகத்தை ஒட்டி, கணபதி பூஜை, புண்யாஹவாசனம், சங்கல்பம், கலச ஸ்தாபனம் - காலை 8:00 மணி; மஹா சண்டியாகம் துவக்கம் - 8:30 மணி; பூர்ணாஹூதி - பகல் 12:00 மணி; மஹா மங்களாரத்தி - 1:00 மணி; அன்னதானம் - 1:30 மணி. இடம்: ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர்.
பிரம்ம ரத உத்சவம்
ஸ்ரீ சோமேஸ்வர சுவாமி கோவில் பிரம்ம ரத உத்சவத்தை ஒட்டி, பிரதகால மஹா அபிஷேகம், பிரம்ம ரத உத்சவம் - காலை 11:00 மணி. இடம்: ஸ்ரீ சோமேஸ்வரர் கோவில், ஹலசூரு.
பிரம்ம ரத உத்சவத்தை ஒட்டி சித்திரகோபுர உத்சவம் - காலையில். இடம்: ஸ்ரீ நாகேஸ்வர சுவாமி கோவில், பேகூர், பெங்களூரு.
ஸ்ரீ ராமநவமி
ஸ்ரீவாணி கலா கேந்திரா சார்பில் 33ம் ஆண்டு ராமநவமி சங்கீத உத்சவத்தை ஒட்டி, அக் ஷதா ருத்ரபட்னாவின் பாடல், ஸ்ருதியின் வயலின், ரகு பகவத்தின் மிருதங்கம், கார்த்திக்கின் கஞ்சீரா - மாலை 6:30 மணி. இடம்: ஸ்ரீ வாணி வித்யா கேந்திரா, பசவேஸ்வர நகர், பெங்களூரு.
ஸ்ரீ ராம சேவா மண்டலி சார்பில் 73ம் ஆண்டு ராமநவமியை ஒட்டி, சாரதா சங்கீத பாலகா குழுவினரின் பஜனை - மாலை 5:30 மணி; சாருலதா குழுவினரின் வயலின் - 6:30 மணி. இடம்: ஸ்ரீ ஆவனி சங்கர மடம், நான்காவது பிரதான சாலை, ஒன்பதாவது குறுக்கு சாலை, வித்யாரண்யபுரம், மைசூரு.
சுவாமி ஞானயோகானந்தாஜியின் ஸ்ரீமத் பகவத் கீதை சொற்பொழிவு - மாலை 6:00 மணி. இடம்: ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரமம், யாதவகிரி, மைசூரு.
அபிஷேக் ரகுராமின் பாடல், கோகுல் ஆலன்கெடேயின் வயலின், கிஷோர் ரமேசின் மிருதங்கம், சுமுக் கரந்தின் கஞ்சீரா - மாலை 6:15 மணி. இடம்: ஸ்ரீ பிரசன்ன சீதாராமா மந்திரா, என்.எஸ்.சாலை, மைசூரு.
ஸ்ரீ ராமபுத்யாய சபா நல அறக்கட்டளை சார்பில் 136ம் ஆண்டு ராமநமவியை ஒட்டி, வெங்கடேஷ் குமாரின் ஹிந்துஸ்தானி இசை, வீரபத்ரய்யாவின் ஹார்மோனியம், கேசவ் ஜோஷியின் தபலா - மாலை 6:30 மணி. இடம்: திருமதி ஆலம்மன சவுட்ரி, ஸ்ரீராம்பேட், மைசூரு.
லலித ஹோமம், ஹரிஷ் பாண்டவ் குழுவினரின் சாக்சபோன் இசை நிகழ்ச்சி - மாலை 6:30 மணி. இடம்: ஸஸ்ரீராம மந்திரா, ஜெயநகர், மைசூரு.
பங்குனி உத்திரம்
சமர்ப்ப ணம் அமைப்பு சார்பில் பங்குனி உத்திரம் எனும் 12வது உத்திரம் விளக்கு உத்சவத்தை ஒட்டி, ஸ்ரீ சக்கர பூஜை, சுவாசினியின் லலிதா சஹஸ்ரநாம பூஜை - காலை 8:00 முதல் மதியம் 2:30 மணி வரை; ஜனனி பாலாஜியின் ஹரிகதை சொற்பொழிவு - 3:30 முதல் மாலை 5:00 மணி வரை; கடயநல்லுார் ஸ்ரீ ராஜகோபாலதாஸ் பாகவதர் குழுவினரின் அபங்க் பஜனை - 5:30 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: ஸ்ரீ கோதண்டராம சமுதாய பவன், ஸ்ரீராம கோவில் வளாகம், ஈஸ்கான் எச்.பி.ஆர்., லே - அவுட், காச்சரகானஹள்ளி, பெங்களூரு.
தீர்த்த காவடிகள், கூடபள்ளி சங்கமம், தீர்த்த அபிஷேகம் - 6:30 மணி; சந்தி பூஜை - 8:00 மணி; சிறுகாலை சந்தி பூஜை - 9:00 மணி; உச்சிகால பூஜை - பகல் 12:00 மணி; தீபாராதனை - மாலை 5:30 மணி; அர்த்த ஜாம பூஜை - இரவு 10:00 மணி. இடம்: பத்ரகிரி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், பி.எச்.சாலை, பத்ரகிரி, சிக்கமகளூரு.
ஸ்ரீ பா ர்வதி - பரமேஸ்வரர் கல்யாண உத்சவத்தை ஒட்டி, பந்தகால் நடுதல் - மாலை 4:00 மணி; மணமகன் அழைப்பு - 5:00 மணி; விருந்து உபசரிப்பு - இரவு 7:30 மணி. இடம்: சுயம்பு காளியம்மன் கோவில், ஹலசூரு மார்க்கெட்.
லேசர் ஷோ
அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
பொது
நடனம்
எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.
சமையல் பயிற்சி
ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
பயிற்சி
இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
இசை
ஏஸ் ஆப் ஸ்பேட்ஸ் - இரவு 8:00 முதல் 10:00 மணி வரை. இடம்: சின் லுங் பிரிவெரி, 1135, 100 அடி சாலை, இந்திரா நகர்.
லேடிஸ் நைட்ஸ் - இரவு 8:00 முதல் 12:00 மணி வரை. இடம்: நோ லிமிட்ஸ் லாஞ்சு அண்ட் கிளப், 2வது தளம், அல்லய்டு பிளாசா, மக்ரத் சாலை, அசோக் நகர்.
காமெடி
ஜோக்ஸ் நைட் - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டன்ஸ், சர்ச் தெரு, அசோக் நகர்.
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 9:00 முதல் 10:20 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.

