ஆன்மிகம்
ஸ்ரீ ராமானுஜர் சித்திரை உத்சவம்
ஸ்ரீ ராமானுஜர் சித்திரை திருவாதிரை உத்சவத்தை ஒட்டி தினமும் காலை திவ்ய பிரபந்தம் சேவா காலம், சாத்துமுறை, மங்களாரத்தி தீர்த்தம், மங்களா ஸ்நானம், பிரசாதம் வழங்கல் - மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: ஸ்ரீ பான் பெருமாள் கோவில் ஸ்ரீ கிருஷ்ணா மந்திர், பஜார் தெரு, ஹலசூரு.
ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி மஹோத்சவத்தை ஒட்டி, அபிஷேகம் - காலை 9:00 மணி; ஊஞ்சல் சேவை - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ திருவேங்கட ராமானுஜர் சன்னிதி, ஸ்ரீ ஆண்டாள் கோவில், ராமகிருஷ்ணா மடம் சாலை, ஹலசூரு.
ஸ்ரீ ராமநவமி
ஸ்ரீவாணி கலா கேந்திரா சார்பில் 33ம் ஆண்டு ராமநவமி சங்கீத உத்சவம் நிறைவு நாளை ஒட்டி, இயக்குநர் சித்தார் பட் இயக்கத்தில் 'சூஜி மல்லிகே' கன்னட நாடகம் - மாலை 5:30 மணி. இடம்: ஸ்ரீ வாணி வித்யா கேந்திரா, பசவேஸ்வர நகர், பெங்களூரு.
லேசர் ஷோ
அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
பொது
பொங்கல் விழா
டி.ஆர்.டி.ஓ., பொங்கல் சங்கமம் சார்பில் பொங்கல் விழா - காலை 7:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: சன்ஸ்கிருதி அரங்கம், சி.வி.ராமன் நகர், பெங்களூரு.
இலவச யோகா முகாம்
சிட்டி வெல்நஸ் யோகா சென்டர் சார்பில் அனைத்து வயதினருக்கும் இலவச யோகா பயிற்சி முகாம் - காலை 6:00 முதல் 7:00 மணி வரையிலும்; மாலை 6:30 முதல் 7:30 மணி வரையிலும். இடம்: 1252/ஏ, ஸ்ரீ நந்தி ஆர்கேட், இரண்டாவது குறுக்கு, கிருஷ்ணமூர்த்திபுரம், மைசூரு.
ட்ரோன் கண்காட்சி
சர்வீஸ் இன்டர்நேஷனல் சார்பில் ட்ரோன் கண்காட்சி 2026 - காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: பெங்களூரு இன்டர்நேஷனல் கண்காட்சி மையம், துமகூரு சாலை, மாதவரா.
ஆயுர்வேத மருத்துவ முகாம்
ஜே.எஸ்.எஸ்., ஆயுர்வேத மருத்துவமனை சார்பில் இரத்தக் கொழுப்புச் சிகிச்சைப் முகாம் - காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை. இடம்: ஜே.எஸ்.எஸ்., ஆயுர்வேத மருத்துவமனை, லலிதாதிரிபுரம் சாலை, ஆலனஹள்ளி, மைசூரு. தொடர்புக்கு: 98864 85005 அல்லது 99454 16262.
நடனம்
எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.
சமையல் பயிற்சி
ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
பயிற்சி
இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விப ரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.
ஆண், பெண் இருபால ருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
இசை
கன்னடம், இந்தி ஜாமிங் - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை மற்றும் மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.
லெட்ஸ் ஜாம் - மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சர்ஜாபூர் சோசியல், மாரத்தஹள்ளி சாலை, தொட்டகன்னெள்ளி, பெங்களூரு.
ஜாமிங் அன் பிளக்டு - மாலை 6:00 முதல் 9:20 மணி வரை. இடம்: ப்ளா ப்ளா, 71 - 72, ஜோதி நிவாஸ் கல்லுாரி சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
ஜாமிங் நைட் - மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஜே.பி., நகர் சோசியல், 7, 33வது பிரதான சாலை, ஆறாவது பேஸ், ஜே.பி.நகர்.
கோலிவுட் தமிழ் நைட் - இரவு 8:45 முதல் அதிகாலை 12:05 மணி வரை. இடம்: 404 பை டி.ஓ.எப்., 4, இரண்டாவது தளம், தாவரகெரே, எஸ்.ஜி., பாளையா.
லிங்கின் பார்க் - இரவு 9:00 முதல் 11:00 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, ஐ.டி.பி.எல்., சாலை, பட்டந்துார் அக்ரஹாரா, ஒயிட்பீல்டு.
காமெடி
காமெடி நைட் - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1,018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 7:00 முதல் 8:30 மணி வரை. இடம்: அல்லியன்ஸ் பிரான்சைஸ், திம்மையா சாலை, சிவாஜி நகர்.
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: தி அண்டர்கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எ ச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
டார்க் காமெடி - மாலை 6:00 முதல் இரவு 7:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டன்ஸ், சர்ச் தெரு.
வைல்டு காமெடி நைட் - இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: தி கென்கோ லைப் கபே, ஆறாவது குறுக்கு சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.
பங்க் தி ஸ்கூல் - இரவு 7:00 முதல் 8:30 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 950, பைட் டவர்ஸ், மூன்றாவது தளம், 12வது பிரதான சாலை, எச்.ஏ.எல்., இந்திரா நகர்.

