sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மே 01, 2026 ,சித்திரை 18, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 இன்று இனிதாக... 

/

 இன்று இனிதாக... 

 இன்று இனிதாக... 

 இன்று இனிதாக... 


ADDED : ஏப் 30, 2026 11:53 PM

Google News

ADDED : ஏப் 30, 2026 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

சித்ரா பவுர்ணமி

 சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. சிறப்பு அபிஷேகம் - அதிகாலை 4:00 மணி; மலர் அலங்காரம், மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல் - 9:00 மணி. இடம்: ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில், சிவாஜி நகர்.

 பால் குடம் ஊர்வலம் - மாலை 3:30 முதல் 4:30 மணி வரை; அம்மனுக்கு அபிஷேகம் - 5:00 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 7:30 மணி; பிரசாதம் வழங்கல் - 8:00 மணி. இடம்: ஸ்ரீ மாரியம்மன் கோவில், 16வது குறுக்கு சாலை, ஜெய் பாரத் நகர், பெங்களூரு.

 சஹஸ்ர புஷ்ப அர்ச்சனை, ரத ஆரத்தி சேவை, மஹா மங்களாரத்தி, பிரசாதம் வினியோகம் - மாலையில். இடம்: ஸ்ரீ நாகம்மா தேவி கோவில், செயின்ட் ஜான்ஸ் சாலை சிவன் ஷெட்டி கார்டன்.

 சிறப்பு பூஜைகள் - மாலையில். இடம்: ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில், வண்ணாரபேட்டை, விவேக் நகர்.

 பவுர்ணமி இசை - 291ஐ ஒட்டி, பல்லாரி ராகவேந்திராவின் பாடல், மத்துார் ஸ்ரீநிதியின் வயலின், துமகூரு ரவிசங்கரின் மிருதங்கம், சரத் கவுசிக்கின் கடம் - மாலை 6:00 மணி. இடம்: சுத்துார் மடம், சாமுண்டி மலை அடிவாரம், மைசூரு.

 சித்ரா பவுர்ணமி முன்னிட்டு மீனாட்சி கிரிஜா கல்யாணம் -காலை 9:30 மணி. லட்ச தீபோத்சவம்-மாலை 5:30 மணி; இடம்: பால சோமேஸ்வரர் கோவில், உரிகம் பேட்டை, தங்கவயல்.

 ஸ்ரீ ஆதி சங்கராச் சாரியார் அருளிய சவுந்தர்ய லஹரி பாராயண ஹோமம்; ஸ்ரீ வாசவி மகிளா பஜனை மண்டலி, நிவேதிதா மாத்ரு மண்டலி, பஜனை. இரவு 7:00 மணி முதல். மஹா மங்களாரத்தி, அதனைத் தொடர்ந்து அன்னபிரசாதம் - இரவு 8:00 மணி. இடம்: ஸ்ரீ அருள் மிகு ஆதி சக்தி மாரியம்மன் கோவில்,4 வது பிளாக் ராபர்ட்சன் பேட்டை.

ஆண்டு விழா

 ஸ்ரீ வெங்கடேஸ்வர தயான கேந்திரா சார்பில் உத்தராடி மடத்தின் எட்டாம் ஆண்டு விழாவை ஒட்டி, புருஷசுக்த ஹோமம், ஸ்ரீசுக்த ஹோமம் - காலையில்; மஹா ரத உத்சவம் - மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ வெங்கடேஸ்வர தயான கேந்திரா வளாகம், ஸ்ரீராமபுரம், மைசூரு.

மஹா கொடி கம்ப பூஜை

 ஸ்ரீமுத்து மாரியம்மன் கோவில் வளாகத்தில், கலை நுட்பத்துடன் பித்தளையால் புதிய துவஜ ஸ்தம்பா எனும் கொடி கம்பம் நிறுவியுள்ளனர். இதற்கான சிறப்பு பூஜை- காலை 9:15 மணி முதல் நடக்கிறது. இடம்: ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில், இருதய புரம், ராபர்ட்சன் பேட்டை.

லேசர் ஷோ

 அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது

புத்த ஜெயந்தி

 புத்த ஜெயந்தியை ஒட்டி, கலாசார நிகழ்ச்சிகள் - காலை 9:30 மணி. இடம்: நமனா கல்யாண மண்டபம், அசோகா சதுக்கம், மைசூரு.

2570- வது புத்த ஜெயந்தி

 அசோக தம்ம தூத புத்தர் ஆலயத்தில் புத்த பவுர்ணமி. திரி சரணம், பஞ்சசீலம் ஓதுதல், தியானம், புத்தர் அருளுரை விளக்க சொற்பொழிவு- காலை 7:30 மணி முதல்; கொடி ஏற்றல், போதி பூஜை- 9:40 மணி ; உலக அமைதிக்கான ஊர்வலம் புத்த விஹார் முதல் தாசில்தார் அலுவலகம் வரை.-காலை:10:00 மணி; மருத்துவ மனையில் பழங்கள், பழ ரசங்கள் வழங்கல்- மாலை 4:00 மணி; விளக்கு பூஜை, தியானம், புத்தர் அருளுரை சொற்பொழிவு - மாலை 5:30 மணி முதல். இடம்: கவுதம் நகர், கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் டிப்போ எதிரில், ஆண்டர்சன் பேட்டை.

தொழிலாளர் தினம்

 தொழிலாளர் தினத்தை ஒட்டி மைசூரு மாவட்ட அனைத்திந்திய வர்த்தக சங்க காங்கிரஸ் சார்பில் தொழிலாளர் தின கொண்டாட்டத்தை ஒட்டி ஊர்வலம் - காலை 11:00 மணி; மாநாடு - மதியம் 12:00 மணி. இடம்: டவுன் ஹால், மைசூரு.

 பெமல் தொழிற்சங்க அலுவலகத்தில் மேதின விழா. கொடியேற்றல் - காலை 7:00 மணி. ஏஐடியுசி தொ ழிற் சங்கம், சிபிஐ கட்சி சார்பில் கொடியேற்றல். காலை: 8:00 மணி முதல். இடம்: மாரிகுப்பம் தென் பகுதி, கில்பர்ட்ஸ் கார்னர், ஐந்து விளக்கு பகுதி, உரிகம் என்.டி.பிளாக், கென்னடிஸ், கோரமண்டல் டாங்க் பிளாக். தங்கவயல் .

 அம்பேத்கர் சோஷியல் செக்குலார் புரோகரசிவ் பாரம் மற்றும் சிபிஐ இணைந்து நடத்தும் உலக தொழிலாளர் தின விழா - மாலை 5:00 மணி முதல். இடம்: ஆலமரம், பெமல் நகர், தங்கவயல்.

நடனம்

 எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.

சமையல் பயிற்சி

 ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

பயிற்சி

 வாழும் கலை அமைப்பின் சார்பில் சுதர்சன் கிரியா, சுவாசம் யோகா, தியானம் பயிற்சி- காலை 6:30 முதல் 8:30 மணி. மாலை 6:30 முதல் இரவு 8:30 மணி. இடம்: பி.வி.என்., பள்ளி, 4 வது கிராஸ் ராபர்ட்சன் பேட்டை.

 இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.

 ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

 களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

 ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.

இசை

 கன்னடம், இந்தி ஜாமிங் - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை மற்றும் மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.

 லெட்ஸ் ஜாம் - மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சர்ஜாபூர் சோசியல், மாரத்தஹள்ளி சாலை, தொட்டகன்னெள்ளி, பெங்களூரு.

 ஜாமிங் அன் பிளக்டு - மாலை 6:00 முதல் 9:20 மணி வரை. இடம்: ப்ளா ப்ளா, 71 - 72, ஜோதி நிவாஸ் கல்லுாரி சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

 ஜாமிங் நைட் - மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஜே.பி., நகர் சோசியல், 7, 33வது பிரதான சாலை, ஆறாவது பேஸ், ஜே.பி.நகர்.

 கோலிவுட் தமிழ் நைட் - இரவு 8:45 முதல் அதிகாலை 12:05 மணி வரை. இடம்: 404 பை டி.ஓ.எப்., 4, இரண்டாவது தளம், தாவரகெரே, எஸ்.ஜி., பாளையா.

 லிங்கின் பார்க் - இரவு 9:00 முதல் 11:00 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, ஐ.டி.பி.எல்., சாலை, பட்டந்துார் அக்ரஹாரா, ஒயிட்பீல்டு.

காமெடி

 காமெடி நைட் - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1,018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.

 ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 7:00 முதல் 8:30 மணி வரை. இடம்: அல்லியன்ஸ் பிரான்சைஸ், திம்மையா சாலை, சிவாஜி நகர்.

 ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: தி அண்டர்கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

 டார்க் காமெடி - மாலை 6:00 முதல் இரவு 7:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டன்ஸ், சர்ச் தெரு.

 வைல்டு காமெடி நைட் - இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம் : தி கென்கோ லைப் கபே, ஆறாவது குறுக்கு சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.

 பங்க் தி ஸ்கூல் - இரவு 7:00 முதல் 8:30 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 950, பைட் டவர்ஸ், மூன்றாவது தளம், 12வது பிரதான சாலை, எச்.ஏ.எல்., இந்திரா நகர்.






      Dinamalar
      Follow us