ADDED : ஜூலை 01, 2026 11:24 PM
மண்டல பூஜை
ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்ததை ஒட்டி, மண்டல பூஜை - காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரையிலும்; மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரையிலும்; ஹோமம் - காலை 10:00 முதல் 11:00 மணி வரை; அபிஷேகம் - 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை. இடம்: ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில், பாபுராயனகொப்பலு, ஸ்ரீரங்கபட்டணா, மாண்டியா.
கும்பாபிஷேகம்
கும்பாபிஷேகத்தை ஒட்டி, முதல் கால யாகசாலை பூஜை, ஹோமங்கள், வேத பாராயணம், பூர்ணாஹூதி, தீபாராதனை, யந்திர ஸ்தாபனம், ரத்ன நியாசம் - காலையில்; இரண்டாம் கால யாகசாலை பூஜை, அஷ்டபந்தனம் சாத்துதல், ஹோமங்கள், பூர்ணாஹூதி, தீபாராதனை, பிரசாதம் வழங்கல் - மாலையில். இடம்: ஸ்ரீவரசித்தி விநாயகா கோவில், தம்புஷெட்டி கார்டன், காக்ஸ் டவுன்.
லேசர் ஷோ
அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
ஆயுர்வேத முகாம்
காவேரி ஆயுர்வேத கல்லுாரி, மருத்துவமனை சார்பில் இலவச சிகிச்சை முகாம் - காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை. இடம்: மருத்துவமனை வளாகம், தேவகவுடா சதுக்கம் அருகில், கே.பி.எல்., லே - அவுட், மைசூரு. தொடர்புக்கு 91317 99317.
இலவச மருத்துவ முகாம்
இலவசமாக புற்றுநோய் கண்டறியும் முகாம் - காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: பிரீத்தி புற்றுநோய் மையம், லட்சுமிபுரம், மைசூரு. தொடர்புக்கு 0821 - 4259 259.
