ADDED : ஜூலை 05, 2026 11:30 PM
ஆன்மிகம் மண்டல பூஜை ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்ததை ஒட்டி, மண்டல பூஜை - காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரையிலும்; மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரையிலும்; ஹோமம் - காலை 10:00 முதல் 11:00 மணி வரை; அபிஷேகம் - 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை; ஆரத்தி - மதியம் 12:30 மணி. இடம்: ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில், பாபுராயனகொப்பலு, ஸ்ரீரங்கபட்டணா, மாண்டியா.
லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
பொது கைவினை பொருட்கள் கண்காட்சி குஜராத் அரசின் குஜராத் கைவினை பொருட்கள் உத்சவத்தை ஒட்டி, பாரம்பரிய உடைகள் கண்காட்சி - காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ஜே.எஸ்.எஸ்., அர்பன் ஹட், வட்ட சாலை, ஹெப்பால் தொழிற்பகுதி, மைசூரு.
விளையாட்டு கே.எஸ்.சி.ஏ., மஹாராஜா டிரோபி டி20யை ஒட்டி ஹூப்பள்ளி டைகர்ஸ் - கோஸ்டல் கிங்ஸ் மங்களூரு இடையே போட்டி - காலை 9:00 மணி. இடம்: எம்.சின்னசாமி கிரிக்கெட் மைதானம், பெங்களூரு.
