ADDED : ஆக 01, 2026 06:38 AM
ஆன்மிகம்
ராதா கல்யாணம்
பெங்களூரு கல்யாண்நகர் ஆஸ்திக சமாஜம் சார்பில், இரண்டு நாட்கள் நடக்கும் ராதா கல்யாணம் உத்சவம் இன்று துவக்கம். தோடயமங்களம், குரு தியானம், அஸ்டபதி, பஞ்சபடி, தியானம், பூஜை, பிரசாத விநியோகம் - மதியம் 3:00 மணி முதல். இடம்: சீதாராமா கல்யாண மண்டபம், சுப்பையய்யனபாளையா, பானஸ்வாடி மெயின் ரோடு.
மண்டல பூஜை
ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்ததை ஒட்டி, மண்டல பூஜை - காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரையிலும்; மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை; ஹோமம் - காலை 10:00 முதல் 11:00 மணி வரை; அபிஷேகம் - 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை; ஆரத்தி - மதியம் 12:30 மணி. இடம்: ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில், பாபுராயனகொப்பலு, ஸ்ரீரங்கபட்டணா, மாண்டியா.
லேசர் ஷோ
அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
பொது
விற்பனை, கண்காட்சி
சஹாரா கலை மற்றும் கைவினை, கைத்தறி கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மைதானம், பழைய மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம், மைசூரு. தொடர்புக்கு 90351 60215, 95900 18133.
