தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இன்று இனிதாக 

 இன்று இனிதாக 

 இன்று இனிதாக 


ADDED : ஆக 05, 2026 11:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2026 11:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

ஆடி கிருத்திகை

ஆடி கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோவில்களில் இன்று சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடக்கின்றன.

 சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜை - காலை 6:30 மணி; பக்தர்கள் சுமந்து வரும் காவடிகள், சுப்பிரமணிய சுவாமியின் பாதத்தில் சமர்ப்பிப்பு. - காலை 6:30 மணி முதல் இரவு வரை. இடம்: தங்கமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், தொட்டண்ணாநகர், காவல் பைரசந்திரா.

 வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் - காலை 9:30 மணி; தீபாராதனை - காலை 11:30 மணி; சஹஸ்ர நாம பூஜை - மாலை 6:00 மணி; மஹா மங்களாரத்தி, பிரசாத விநியோகம் - இரவு 7:00 மணி. இடம்: தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜிநகர்.

 சிறப்பு அபிஷேகம் - காலை 5:00 மணி; மஹா மங்களாரத்தி - காலை 10:30 மணி. இடம்: மஹான் ஸ்ரீ ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம், கங்காதர் ஷெட்டி சாலை, ஹலசூரு.

 பாலதண்டாயுத பாணிக்கு சிறப்பு அலங்காரம் - காலை 7:00 மணி; பக்தர்கள் சுமந்து வரும் காவடிகளை பெறுதல் - இரவு 9:30 மணி வரை. இடம்: தண்டபாணி ஞானமந்திரா, 6 வது பிளாக், ராஜாஜிநகர்.

 முருகருக்கு பால், பஞ்சாமிர்த அபிஷேகம் - காலை 7:00 மணி முதல் 8:30 மணி வரை; கந்த சஷ்டி கவச பாராயணம் - காலை 8:30 மணிக்கு மேல்; மஹா மங்களாரத்தி - காலை 9:30 மணி. இடம்: சதாசிவா கோவில், லிங்கராஜபுரம்.

 முருகருக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மஹா மங்களாரத்தி - காலை 4:00 மணி முதல்; பக்தி இசை நிகழ்ச்சி - மாலை 6:00 மணி. இடம்: பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், டி.சி.எம்.,ராயன் ரோடு, வேல்முருகபுரம்.

 முருகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் - காலை 4:30 மணி முதல் 6:30 மணி வரை. இடம்: ஸ்ருங்ககிரி சண்முகா கோவில், ஆர்.ஆர்.நகர்

 கோவில் நடை திறப்பு, அபிஷேகம், விசேஷ ஆராதனை காவடி சாத்துப்படி, பிரசாத விநியோகம் - காலை 4:00 மணி முதல்; உற்சவ மூர்த்தி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் கோவில் பிரகார உற்சவம் - இரவு 9:00 மணி. இடம்: ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம், உரிகம் பேட்டை, தங்கவயல்.

 உற்சவ மூர்த்தி, முருக பெருமானுக்கு பாலாபிஷேகம், சிறப்பு அலங்காரம், அர்ச்சனை, தீபாராதனை - காலை 5:00 மணி முதல்; அன்னதானம் - மதியம் 1:00 மணி; பக்தி பாடல் கச்சேரி - மாலை 6:00 மணி; மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேர் பவனி - இரவு 8:00 மணி. இடம்: பால சுப்ரமணியர் பாத கோவில், அம்பேத்கர் சாலை, என்.டி.பிளாக், தங்கவயல்.

 அபிஷேகம், சிறப்பு அலங்காரம், அர்ச்சனை, தீபாராதனை, பிரசாத விநியோகம் - காலை 5:00 மணி முதல்; அன்னதானம் - மதியம் 1:00 மணி; சிறப்பு பூஜைகள் - மாலை 4:00 மணி , தீபாராதனை - இரவு 7:00 மணி. இடம்: பொன்மலை முருகன் கோவில், பெமல் நகர், தங்கவயல்.

 விஸ்வரூ ப தரிசனம் - காலை 4:00 மணி; விளா பூஜை - காலை 5:00 மணி; சந்தி பூஜை - காலை 8:00 மணி; சிறுகாலை பூஜை - காலை 9:00 மணி; உச்சி கால பூஜை - மதியம் 12:00 மணி; தீபாராதனை - மாலை 5:30 மணி; அர்த்த ஜாம பூஜை - இரவு 11:00 மணி. இடம்: ஸ்ரீ சிவ சுப்பிரமணிய சுவாமி கோ வில், பத்ரகிரி, சிக்கமகளூரு மாவட்டம்.

மண்டல பூஜை

 ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்ததை ஒட்டி, மண்டல பூஜை - காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரையிலும்; மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரையிலும்; ஹோமம் - காலை 10:00 முதல் 11:00 மணி வரை; அபிஷேகம் - 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை; ஆரத்தி - மதியம் 12:30 மணி. இடம்: ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில், பாபுராயனகொப்பலு, ஸ்ரீரங்கபட்டணா, மாண்டியா.

பொது

மலர் கண்காட்சி

 சுதந்திர தினத்தை முன்னிட்டு, பெங்களூ ரு லால்பாக்கில் 12 நாட்கள் நடக்கும் மலர் கண்காட்சி துவக்கம். - காலை 9:00 மணி முதல், மா லை 6:30 மணி வரை.

விற்பனை, கண்காட்சி

 சஹாரா கலை மற்றும் கைவினை, கைத்தறி கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மைதானம், பழைய கலெக்டர் அலுவலகம் பின்புறம், மைசூரு. தொடர்புக்கு 90351 60215, 95900 18133.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us