ADDED : ஆக 15, 2026 04:54 AM
ஆன்மிகம்
பிரம்ம ரத உத்சவம்
ஸ்ரீ நாகம்மா தேவி 34ம் ஆண்டு பிரம்ம ரத உத்சவத்தை ஒட்டி, ஸ்ரீ சனி பகவான் சுவாமி, ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பிரசாதம் வழங்கல் - காலையில். இடம்: ஸ்ரீ நாகம்மா தேவி கோவில், செயின்ட் ஜான்ஸ் சாலை, பெங்களூரு. தொடர்புக்கு 99809 05225.
சனீஸ்வர பகவான் அகண்ட மஹா ஹோமம்
ஸ்ரீ சனீஸ்வர பகவான் சகல தோஷ நிவாரண அகண்ட மஹா ஹோமம் - காலை 8:30 மணி; பூர்ணாஹூதி, மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் - 11:00 மணி; பக்தர்களால் ஆஹுதி - 11:30 மணி; அன்னதானம் - மதியம் 12:00 மணி. இடம்: சுயம்பு காளியம்மன் கோவில், பஜார் தெரு, ஹலசூரு.
ஆடி திருவிழா
ஆடி பிரம்மோத்சவத்தை ஒட்டி, அம்மன் ஊர்வலம் - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர்.
ஆடி திருவிழாவை ஒட்டி அம்மன் பூ கரகம் - காலை, இரவு 7:00 மணி. இடம்: வெள்ளேரி அம்மன் கோவில், வண்ணார்பேட்டை, விவேக்நகர்.
36 வது ஆண்டு கரக திருவிழாவை ஒட்டி, ஆதிசக்தி மாரியம்மனுக்கு மஹா மங்களாரத்தி - காலை 7:00 மணி; அன்னதானம் - மதியம் 1:00 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 7:00 மணி. இடம்: மஹாமாயி ஆதிசக்தி மாரியம்மன் கோவில், புவனேஸ்வரிநகர்.
ஆடி திருவிழாவை ஒட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் சிலை அலங்கரித்து எடுத்து வருதல் - காலை 7:00 மணி; பாலாபிஷேகம், மஹா மங்களாரத்தி - காலை 8:00 மணி முதல் 11:00 மணி வரை; அன்னதானம் - மதியம் 1:00 மணி; கங்கா பூஜை, மஹா மங்களாரத்தி - மாலை 6:30 மணி. இடம்: ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில், 5 வது முக்கிய சாலை, ஓக்லிபுரம்.
அம்மனுக்கு சிறப்பு பூஜை - காலை 8:00 மணி; அன்னதானம் - மதியம் 12:30 மணி; முத்து மாரியம்மன், கங்கம்மா தேர் ஊர்வலம் - மாலை 5:00 மணி. இடம்: முனீஸ்வரன், முத்து மாரியம்மன், கங்கம்மா கோவில், வரதராஜ்நகர், வித்யாரண்யபுரா.
4ம் வெள்ளி கரக உற்சவத்தின் மஞ்சள் நீராட்டு, உடை கலைப்பு; சிறப்பு பூஜைகள், மகா மங்களாரத்தி, பிரசாத வினியோகம் காலை 10:00 மணி. இடம்: மாரியம்மன் கோவில், பைப் லைன், ராபர்ட் சன் பேட்டை.
ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில், ஓரியண்டல் வட்டம், கோரமண்டல், தங்கவயல்.
ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில், உரிகம், என்.டி.பிளாக், தங்கவயல்.
ஆடிப்பூரம் விழா
ஓம் சக்தி கோவில் 41ம் ஆண்டு ஆடிப்பூரம் திருவிழாவை ஒட்டி, தேசிய கொடியேற்றுதல் - காலை 6:00 மணி; அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், இனிப்பு, தீர்த்த பிரசாதம் வழங்கல் - 6:30 மணி. இடம்: ஓம் சக்தி கோவில், ஷெப்பிங்ஸ் சாலை, சிவாஜி நகர்.
ஓம் சக்தி கோவில் 35ம் ஆண்டு விழாவை ஒட்டி, ஓம் சக்தி தேவிக்கு சங்காபிஷேகம் - காலை 8:45 மணி; பக்தர்களின் கஞ்சி கலச ஊர்வலம் - 10:45 மணி. இடம்: ஸ்ரீ ஓம் சக்தி கோவில், கல்யாண் நகர்.
ஆதிபராசக்தி சக்தி சக்தி பீடம் கோவில் 43ம் ஆண்டு விழாவை ஒட்டி, 8,001 லிட்டர் பால் அபிஷேகம் ஊர்வலம் - காலை 9:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஸ்ரீ ஆதிபராசக்தி சக்தி சக்தி பீடம் கோவில், ஜீவன் பீமா நகர்.
ராதா கல்யாண மஹோத்சவம்
பக்த பிருந்தாவன் சார்பில் ராதா கல்யாண மஹோத்சவத்தை ஒட்டி, நாகேஷ் வாத்தியாரின் கணபதி ஹோமம் - காலை 5:30 மணி; ஹூலிமாவு சவுந்தர்ய லஹரி குழுவினரின் விஷ்ணு சஹஸ்ரநாமம் - 7:00 முதல் 8:00 மணி வரை; தோடயமங்களம் குரு கீர்த்தனைகள், ஜெயதேவா அஸ்தபதி, ராம்கோபால் பாகவதர் குழுவினரின் ஹரித்வார மங்களம் - 8:30 முதல் மதியம் 1:30 மணி வரை; பஞ்சபதி சிவபிரியா ராமசாமி குழுவினரின் தேவத தியானங்கள் 2:00 முதல் மாலை 5:00 மணி வரை. ராம்கோபால் பாகவதர் குழுவினரின் ஹரித்வார மங்களம் - மாலை 5:30 முதல் இரவு 10:00 மணி வரை. இடம்: தேவகி ஆனந்த் சுவர்ணா கன்வென்ஷன் ஹால், பில்லவா சங்கம், 63, பன்னரகட்டா சாலை, பெங்களூரு.
லேசர் ஷோ
அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
பொது
இலவச மருத்துவ முகாம்
லயன்ஸ் கிளப், அப்துல் கலாம் நல அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம் - காலை 8:00 முதல் மதியம் 2:00 மணி வரை. இடம்: பார்வதி கல்யாண மண்டபம், ராமசந்திரபுரம். தொடர்புக்கு 91419 32133.
விற்பனை, கண்காட்சி
சஹாரா கலை மற்றும் கைவினை, கைத்தறி கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மைதானம், பழைய கலெக்டர் அலுவலகம் பின்புறம், மைசூரு. தொடர்புக்கு 90351 60215, 95900 18133.
சுதந்திர தின விழா
தேசியக்கொடி ஏற்றல், தேசிய, மாநில, விவசாய கீதங்கள் பாடுதல், வரவேற்புரை, சிறப்பு விருந்தினர், தலைமை உரை, மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள், பரிசளிப்பு. இடம்: நகராட்சி விளையாட்டு திடல், ராபர்ட்சன் பேட்டை.
தேசியக் கொடி ஏற்றி இனிப்பு வழங்கல். காலை: 10:00 மணி. இடம்: கவுதம் நகர், சுமதி நகர். பூங்கா, ராபர்ட்சன் பேட்டை.
எம்.ஜி.மார்க்கெட் வியாபாரிகள் சங்கம், ராபர்ட் சன் பேட்டை.
காந்தி, காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கல். காலை 10:00 மணி. இடம்: ராபர்ட்சன் பேட்டை.
அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு, தனியார் மருத்துவ மனைகள், வங்கிகள். தொழிற்சாலைகள். காலை 8:00 மணி. இடம்: தங்கவயல்
மலர் கண்காட்சி
சுதந்திர தினத்தை முன்னிட்டு, பெங்களூரு லால்பாக்கில் மலர் கண்காட்சி - காலை 9:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை.
ஆயுர்வேத முகாம்
காவேரி ஆயுர்வேத மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை சார்பில் முதுகுவலி, பருவமழை காய்ச்சல், தெற்றுக்கு இலவச பரிசோதனை - காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை. இடம்: மருத்துவமனை வளாகம், தேவகவுடா சதுக்கம், கே.பி.எல்., லே - அவுட், மைசூரு. தொடர்புக்கு 97317 99317.
