தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இன்று இனிதாக...

 இன்று இனிதாக...

 இன்று இனிதாக...


ADDED : ஆக 30, 2026 11:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2026 11:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

மஹா சங்கடஹர சதுர்த்தி

 சங்கடஹர சதுர்த்தியை ஒட்டி, கணபதி ஹோமம், அபிேஷகம், அலங்காரம், மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் - மாலை 5:30 மணி முதல். இடம்: மஹான் ஸ்ரீ ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம், கங்காதர செட்டி சாலை, ஹலசூரு.

 சிறப்பு பஞ்சாமிர்த அபிஷேகம் - காலை 8:00 மணி; மஹா கணபதி சஹஸ்ர மோதக ஹோமம் - 10:00 மணி; சஹஸ்ரநாம அர்ச்சனை - மாலை 6:00 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ லேக்வியூ மஹா கணபதி கோவில், டாங்க் சாலை, ஹலசூரு ஏரி அருகில்.

 சிறப்பு அபிஷேகம், பூஜைகள் - மாலை 6:00 மணி. இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர்.

 அபிஷேகம், ஹோமம், மஹாமங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் - மாலை 6:00 மணி முதல். இடம்: ஸ்ரீ தண்டுமாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர்.

துாய ஆரோக்கிய அன்னை பெருவிழா

 துாய ஆரோக்கிய அன்னை பெருவிழாவை ஒட்டி, தமிழில் திருப்பலி - அதிகாலை 5:30, 8:00, 10:00, மதியம் 3:45, இரவு 7:30 மணி; ஆங்கிலத்தில் திருப்பலி - காலை 7:00, 11:00, மதியம் 3:00, இரவு 9:00 மணி; கன்னடத்தில் திருப்பலி - காலை 6:15, 9:00, மதியம் 12:00, மாலை 4:30, இரவு 8:15 மணி; கொங்கனியில் திருப்பலி - மதியம் 1:30 மணி; மலையாளத்தில் திருப்பலி - மதியம் 2:15 மணி. இடம்: துாய ஆரோக்கிய அன்னை தேவாலயம், சிவாஜி நகர்.

லேசர் ஷோ

 அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது

விற்பனை, கண்காட்சி

 சஹாரா கலை மற்றும் கைவினை, கைத்தறி கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மைதானம், பழைய கலெக்டர் அலுவலகம் பின்புறம், மைசூரு. தொடர்புக்கு 90351 60215, 95900 18133.

நாடக பயிற்சி முகாம்

 கவுதமா கல்வி மற்றும் கலாசார சேவை அறக்கட்டளை சார்பில் கல்லுாரி மாணவர்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்களுக்காக ஒரு மாத காலம் நாட்டுப்புறவியல், இசை, நாடக பயிற்சி முகாம் - மாலை 4:00 முதல் 6:00 மணி வரை, வார இறுதி நாட்களில் காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை; மறையுரை, கொடியேற்றம் - மாலை 5:30 மணி; நற்கருணை ஆசிர் - 6:30 மணி. இடம்: ரங்காயன வளாகம், பி.வி.காரந்த், மைசூரு. தொடர்புக்கு 96320 73716, 76187 39343.

இசை

 கன்னடா ஜாமிங் - இரவு 8:00 முதல் 9:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.

 கரோக்கி லைவ் - இரவு 8:00 முதல் 10:00 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, செயின்ட் மார்க்ஸ் சாலை, சாந்தாலா நகர், அசோக் நகர்.

காமெடி

 வைல்டு காமெடி நைட்ஸ் - இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.

 மிட் நைட் காமெடி ஷோ - இரவு 11:00 முதல் அதிகாலை 12:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டன்ஸ், சர்ச் தெரு, அசோக் நகர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us