ADDED : செப் 04, 2026 03:39 AM
ஆன்மிகம்
கிருஷ்ண ஜெயந்தி
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, பெங்களூரு ராஜாஜிநகர் வெஸ்ட் ஆப் கார்ட் ரோடு ஹரே கிருஷ்ணா மலை; கனகபுரா ரோடு வைகுண்டா மலை; ஒயிட்பீல்டு ஹரே கிருஷ்ணா பீல்டு; சர்ஜாபூர் ஐவி ரோசா ரெசார்ட் மைதானத்தில் உள்ள இஸ்கான் கோவில்களில், கிருஷ்ணருக்கு அபிஷேகம், ஆரத்தி, சப்பன் போகம், வெண்ணெய் மிஸ்ரி சேவை, புஷ்பாஞ்சலி சேவை, பல்லக்கு ஊர்வலம், ஜூலன் சேவை, கோ பூஜை, கோடி ஜப யாகம், கீதா பாராயணம், பிரபல கலைஞர்களின் நடனம், இசை நிகழ்ச்சிகள், குழந்தைகளின் சுலோக பாராயணம் - காலை 8:00 மணி முதல் இரவு 12:00 மணி வரை.
கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி, சிவாஜிநகர் யாதவா அசோசியேஷன் சார்பில், கிருஷ்ணரின் உருவப்படம் வரையும் ஓவிய போட்டி. மூன்று முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பங்கேற்கலாம். - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீபகவதி அம்மன் கோவில், சிவாஜிநகர்.
பக்தி பாடல்கள், மஹா மங்களாரத்தி - இரவு 10:30 மணி. இடம்: ஸ்ரீராமானுஜ வேணுகோபால கிருஷ்ணா கோவில், காமராஜ் ரோடு, பழக்கார தெரு, சிவாஜிநகர்.
சர்வதர்ஷன அர்ச்சனை - காலை 7:00 மணி முதல்; ரத உற்சவம் - மாலை 6:00 மணி. இடம்: பான் பெருமாள் கோவில், ஹலசூரு.
கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 7:30 மணி; மஹா மங்களாரத்தி - காலை 10:30 மணி. இடம்: திருவேங்கட ராமனுஜர் சன்னிதி, ராமகிருஷ்ணா மடம் சாலை, ஹலசூரு.
கதம்பா நாமருதா லஹரி சுவாமியின் பஜனை - மாலை 6:30 மணி; மஹா மங்களாரத்தி, பிரசாத விநியோகம் - இரவு 8:30 மணி. இடம்: திருகதம்பாரண்ய ஆசிரமம், சிவாஜிநகர்.
நாலாயிர திவ்ய பிரபந்த சேவா களம், ரோகிணி சாத்துமுறை, ஆரத்தி, பிரசாத விநியோகம் - இரவு 7:00 மணி முதல் 8:30 மணி வரை. இடம்: ஸ்ரீகண்ணபிரான் சன்னிதி, ஆஸ்டின் டவுன்.
பகவான் கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள், மஹாமங்களாரத்தி, பிரசாத விநியோகம்-. காலை 9:00 மணி.
இடம்: கண்ணபிரான் கோவில், மாரிகுப்பம்.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம். விசேஷ பூஜைகள், பிரசாத விநியோகம்.- இரவு 7:00 மணி.
இடம்: ராமானுஜ சித்தாந்த சபை, கென்னடிஸ் 3 வது லைன், உரிகம், தங்கவயல்.
கிருஷ்ணருக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை, -பிரசாத விநியோகம்.- இரவு 7:00 மணி. இடம்: ஹரிகிருஷ்ணா சென்டர், சொர்ணா நகர், ராபர்ட்சன்பேட்டை.
கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, ஹரிநாம சங்கீர்த்தனம், கதா காலட்சேபம்.- மதியம் 12:00 மணி. இடம்: நம்பெருமாள் சன்னதி, ஆண்டர்சன்பேட்டை, தங்கவயல்.
கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, பிரசாத விநியோகம், காலை 9:30 மணி. இடம்: டாங்க் பிளாக் டிரைவர்ஸ் லைன், கோரமண்டல், தங்கவயல்.
சக்சஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் மாணவர்களுக்கு கிருஷ்ணர் ராதை மாறுவேடப்போட்டி.- காலை 10:00 மணி. இடம்: தாசர ஹொசஹள்ளி, தங்கவயல் -- பங்கார்பேட்டை சாலை.
துாய ஆரோக்கிய அன்னை பெருவிழா
துாய ஆரோக்கிய அன்னை பெருவிழாவை ஒட்டி, தமிழில் திருப்பலி - அதிகாலை 5:30, 8:00, 10:00, மதியம் 3:45, இரவு 7:30 மணி; ஆங்கிலத்தில் திருப்பலி - காலை 7:00, 11:00, மதியம் 3:00, இரவு 9:00 மணி; கன்னடத்தில் திருப்பலி - காலை 6:15, 9:00, மதியம் 12:00, மாலை 4:30, இரவு 8:15 மணி; கொங்கனியில் திருப்பலி - மதியம் 1:30 மணி; மலையாளத்தில் திருப்பலி - மதியம் 2:15 மணி. இடம்: துாய ஆரோக்கிய அன்னை தேவாலயம், சிவாஜி நகர்.
தங்கத்தாய் திருத்தல கொடியேற்றம்
ஜெபமாலை, நவநாள் ஜெபம், கொடியேற்றம், திருப்பலி-. மாலை 5:30 மணி. ஏற்பாடு: புனித அல்போன்சா அன்பியும், புல்லின் ஷாப்ட் வட்டாரம், கே.ஜி.எப்., கிளப், ஓக்லி ஷாப்ட் வட்டாரம், டாப் லைன். இடம்: தங்கத்தாய் திருத்தலம், உரிகம் தங்கவயல்.
லேசர் ஷோ
அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
பொது
விற்பனை, கண்காட்சி
சஹாரா கலை மற்றும் கைவினை, கைத்தறி கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மைதானம், பழைய கலெக்டர் அலுவலகம் பின்புறம், மைசூரு. தொடர்புக்கு 90351 60215, 95900 18133.
கண்காட்சி
பெங்களூரில் உள்ள இத்தாலியின் துணை துாதரகமும், தேசிய கலைக்கூடமும் இணைந்து 'ஒரு தாய் பல தாய் மொழிகள்' என்ற தலைப்பில், பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 'ஓவியங்கள், சிலைகள்' கண்காட்சி - செவ்வாய் முதல் வெள்ளி வரை காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை; சனிக்கிழமை, ஞாயிறுகளில் காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: தேசிய கலைக்கூடம், பெங்களூரு. தொடர்புக்கு ngma.bengaluru@gmail.com என்ற மின்னஞ்சலில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
