தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/இன்று இனிதாக: பெங்களூரு

இன்று இனிதாக: பெங்களூரு

இன்று இனிதாக: பெங்களூரு


UPDATED : அக் 29, 2026 12:00 AM

ADDED : அக் 28, 2026 09:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2026 12:00 AM ADDED : அக் 28, 2026 09:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

சங்கடஹர சதுர்த்தி

 சங்கடஹர சதுர்த்தியை ஒட்டி, கணபதி ஹோமம் – மாலை 5:30; மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் – இரவு 8:00 மணி வரை. இடம்: மஹான் ஸ்ரீ ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம், கங்காதர செட்டி சாலை, ஹலசூரு.

 சிறப்பு பஞ்சாமிர்த அபிஷேகம் – மாலை 4:30 மணி; மஹா கணபதி மோதக ஹோமம் – 6:00 மணி; காகர சஹஸ்ரநாம அர்ச்சனை – 6:30 மணி; மஹா மங்களாரத்தி – இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ லேக்வியூ மஹா கணபதி கோவில், டாங்க் சாலை, ஹலசூரு ஏரி அருகில்.

 சிறப்பு அபிஷேகம், பூஜைகள் – மாலை 5:30 மணி. இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர்.

 அபிஷேகம் – மாலை 5:30 மணி; விநாயகர் பூஜை – 6:30 மணி; ஹோமம் – இரவு 7:00 மணி; தீபாராதனை – 7:30 மணி. இடம்: ஸ்ரீ தண்டுமாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர்.

 சிறப்பு அபிஷேகம் – மாலை 5:30 மணி; மஹா மங்களாரத்தி – இரவு 7:30 மணி. இடம்: வரசித்தி விநாயகர் கோவில், காக்ஸ் டவுன்

 சிறப்பு அபிஷேகம் – மாலை 5:30 மணி; மஹா மங்களாரத்தி, பிரசாத விநியோகம் – இரவு 7:30 மணி. இடம்: வலம்புரி விநாயகர் கோவில், பானஸ்வாடி

 அபிஷேகம் – மாலை 5:30 மணி; மஹா மங்களாரத்தி – இரவு 7:30 மணி. இடம்: தொட்ட கணபதி கோவில், பசவனகுடி

 அபிஷேகம் – மாலை 5:30 மணி; மஹா மங்களாரத்தி, தீபாராதனை – இரவு 7:30 மணி. இடம்: ஆதி விநாயகர் கோவில், ஓல்டு மெட்ராஸ் ரோடு, ஹலசூரு.

லேசர் ஷோ

 அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது ‘4கே புரொஜக் ஷன் மேப்பிங்’ நிகழ்ச்சி – இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது

நுால் கலை படைப்பு கண்காட்சி

 கவிதா வெங்கடேஷ் என்பவர் நுால்களை கொண்டு உருவாக்கிய கலை படைப்புகளின் வெளிப்படுத்தும் நான்கு நாட்கள் கண்காட்சி இன்று துவக்கம். பெங்களூரு நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் ஜெயமாலா, அரசின் ஓய்வு கூடுதல் தலைமை செயலர் மஞ்சுநாத் பிரசாத், தகவல் தொடர்பு துறை கமிஷனர் அனுசேத் ஆகியோர் துவக்கி வைப்பு. – காலை 11:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: சித்ரகலா பரிஷத், குமாரகிருபா ரோடு.

மருத்துவ முகாம்

 ஜே.எஸ்.எஸ்., ஆயுர்வேத மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை – காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை. இடம்: மருத்துவமனை வளாகம், ஆலனஹள்ளி, மைசூரு. தொடர்புக்கு 0821 2548 231.

 காவேரி ஆயுர்வேத மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை – காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை. இடம்: மருத்துவமனை வளாகம், கே.பி.எல்., லே – அவுட், மைசூரு. தொடர்புக்கு 97317 99317.

தியான நிகழ்ச்சி

 வாழும் கலை அமைப்பு சார்பில் மன அழுத்தத்தில் இருந்து விடுபட, ஆரோக்கியமான, மகிழ்ச்சியான, அமைதியான வாழ்க்கையை அடைய யோகா, பாராயணம், தியானம் – காலை 6:00 முதல் 8:30 மணி வரையிலும்; 10:30 முதல் மதியம் 1:00 மணி வரையிலும்; மாலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரையிலும். இடம்: அமைப்பு வளாகம், லலிதாத்ரிபுரா சாலை, மைசூரு.

சாக்லேட் பயிற்சி

 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சாக்லேட் செய்ய பயிற்சி – இரவு 7:15 முதல் 9:15 மணி வரை. இடம்: பேப்ரிசோ கிரியேடிவ் ஹப், 447, ஆறாவது பிதான சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே – அவுட்.

திபெத் ஓவிய பயிற்சி

 திபெத் ஓவிய பயிற்சி – இரவு 7:02 முதல் 9:02 மணி வரை. இடம்: எக்ஸ்பிரஸ் சோல் கபே, 4, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.

இசை

 பாலிவுட் நைட் – இரவு 8:00 முதல் 9:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, சம்பங்கி சாலை, மல்லேஸ்வரம்.

 அந்தாக்ஷரி வித் பிரியங்கா – மதியம் 12:00 முதல் 3:00 மணி வரை. இடம்: காசா கரோக்கி, நான்காவது பேஸ், ஜே.பி.நகர்.

 ஆப்டர் ஹவர்ஸ் – இரவு 9:30 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: பட்பீ ரெஸ்டோபார் 104, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

 டீ ஸ்பில்டு – இரவு 8:00 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: ஹவுஸ் ஆப் டோபமைன், ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

காமெடி

 காக் ரோச் – இரவு 11:15 முதல் அதி காலை 1 2:45 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 12வது பிரதான சாலை, இந்திரா நகர்.

 ஆல்மேஸ்ட் பேமஸ் – இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: புளூம் கிரியேடிவ் ஜோன் – முதல் ஸ்டேஜ், இந்திரா நகர்.

 கிசி கோ படானா மத் – இரவு 8:00 முதல் 10:00 மணி வரை. இடம்: கீதா பவன், பேலஸ் குட்டதஹள்ளி, டி.என்.ராமையா லே – அவுட்.

 2 பீஸ் – இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, நான்காவது பேஸ், ஜெ.பி. நகர்.

 கோல்டன் ஹவர் – இரவு 7:00 முதல் 8:30 மணி வரை. இடம்: பன்டர் காமெடி கிளப், ராமையா லே – அவுட், கம்மனஹள்ளி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us