UPDATED : அக் 29, 2026 12:00 AM
ADDED : அக் 28, 2026 10:54 PM
அ நிறம் | அளவு
ஆனேக்கல்: உலர்ந்த துணிகளை எடுத்து வரச் சென்ற பெண், வீட்டின் நான்காவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார்.
பெங்களூரு ரூரல் மாவட்டம், ஆனேக்கல் தாலுகாவின், சிபாயிகல்லியில் வசித்தவர் புவனேஸ்வரி, 49. இவர் சமீப நாட்களாக மன நோயால் அவதிப்பட்டார். இதற்காக அவருக்கு, குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்தனர்.
புவனேஸ்வரி நேற்று முன் தினம் இரவு, துவைத்து உலர்த்திய துணிகளை கொண்டு வர, மாடிக்குச் சென்றார். துணிகளை எடுக்கும் போது, கால் தவறி நான்காவது மாடியில் இருந்து விழுந்தார். அதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து ஆனேக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
