தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தக்காளி விலை கிடுகிடு உயர்வு: 15 கிலோ ரூ.850க்கு விற்பனை

 தக்காளி விலை கிடுகிடு உயர்வு: 15 கிலோ ரூ.850க்கு விற்பனை

 தக்காளி விலை கிடுகிடு உயர்வு: 15 கிலோ ரூ.850க்கு விற்பனை


ADDED : ஜன 04, 2026 04:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 04, 2026 04:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோலார்: தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

கோலார் ஏ.பி.எம்.சி., சந்தை ஏலத்தில், 15 கிலோ உள்ள ஒரு பெட்டி சுமாரான தக்காளி, 850 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அதேநேரத்தில், நல்ல தரமான தக்காளி விலை இன்னும் அதிகமாக உள்ளது. உள்ளூர் சில்லரை சந்தையில், கிலோ, 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வு தக்காளி விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

கோலார் ஏ.பி.எம்.சி., சந்தையில் இருந்து, தமிழகம், ஒடிசா, ஜார்கண்ட், மேற்குவங்கம் மற்றும் பீஹார் மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அதிக அளவில் தக்காளி வாங்கிச் செல்கின்றனர். முக்கியமாக தமிழக வியாபாரிகள் அதிக அளவில் வாங்குகின்றனர். ஆனாலும், ஆசியாவின் இரண்டாவது பெரிய தக்காளி சந்தையான கோலார் ஏ.பி.எம்.சி.,க்கு, கோலார் மாவட்டத்திலிருந்து தக்காளி சப்ளை குறைவாகவே உள்ளது. சித்ரதுர்காவின் செல்லிக்கெரே, துமகூரு, சிக்கபல்லாபூர் மற்றும் ஆந்திராவின் மற்ற சில பகுதிகளில் இருந்து, 90 சதவீத தக்காளி வருகிறது.

தற்போதுள்ள விலையே தொடர்ந்தால், வர்த்தகர்களுக்கும், விவசாயிகளுக்கும் நல்ல லாபம் கிடைக்கும் என, கோலார் ஏ.பி.எம்.சி., செயலர் கிரண் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us