எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பிராமண மாணவர்களுக்கு நாளை ஊக்கத்தொகை
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பிராமண மாணவர்களுக்கு நாளை ஊக்கத்தொகை
UPDATED : நவ 21, 2026 12:00 AM
ADDED : நவ 20, 2026 08:00 PM

பெங்களூரு: எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பிராமண சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களுக்கு, நாளை, ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
கர்நாடகா பிராமண அபிவிருத்தி வாரிய தலைவர் அசகோடு ஜெயசிம்ஹா, பெங்களூரில், நேற்று அளித்த பேட்டி:
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற, பிராமண சமுதாயத்தை சேர்ந்த 132 மாணவர்களுக்கு, பெங்களூரு காந்திநகரில் உள்ள பப்புர்கம்மே சேவா சமிதி ஹாலில், நாளை பாராட்டு விழா நடக்கிறது.
அவர்களுக்கு விஸ்வாமித்ர பிரதிபா புரஸ்கார் – 2026 விருது வழங்கப்படுவதுடன், ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.
முதல் இடம் பிடித்த 41 மாணவர்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய்; இரண்டாம் இடம் பிடித்த, 45 மாணவர்களுக்கு, தலா 10 ஆயிரம் ரூபாய்; மூன்றாம் இடம் பிடித்த, 46 மாணவர்களுக்கு தலா 5,000 ரூபாய் என, 13 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.
நிகழ்ச்சியில், முதல்வர் சிவகுமார், துணை முதல்வர் பரமேஸ்வர், எம்.எல்.ஏ.,க்கள் தினேஷ் குண்டுராவ், தேஷ்பாண்டே, விஸ்வாஸ் வைத்யா, அகில கர்நாடக பிராமண மகாசபை முன்னாள் தலைவர் அசோக் ஹரனஹள்ளி, கர்நாடக அரசின் கூடுதல் தலைமை செயலர் ராஜேந்திரகுமார் கட்டாரியா, கர்நாடக திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநர் திர்லபுரா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது, பிராமண அபிவிருத்தி வாரிய நிர்வாக இயக்குநர் தீபஸ்ரீ, இயக்குனர்கள் குருராஜா பாலகனுார், மகேஷ்குமார் உடன் இருந்தனர்.
