தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ உயர் அதிகாரி 'டார்ச்சர்?' உதவி இயக்குநர் தற்கொலை

 உயர் அதிகாரி 'டார்ச்சர்?' உதவி இயக்குநர் தற்கொலை

 உயர் அதிகாரி 'டார்ச்சர்?' உதவி இயக்குநர் தற்கொலை


ADDED : மார் 22, 2026 06:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2026 06:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துமகூரு: உயர் அதிகாரியின் டார்ச்சர் காரணமாக, சமூக நலத்துறை அதிகாரி ஒருவர், ஓய்வு பெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன் தற்கொலை செய்து கொண்டார்.

துமகூரு மாவட்டம் பாவகடா நகரில், சமூக நலத்துறை உதவி இயக்குநராக பணியாற்றி வந்தவர் மல்லிகார்ஜுன், 60. நேற்று முன்தினம், தான் பணியாற்றி வந்த அலுவலகத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன் பதிவு செய்த காணொளியில், மல்லிகார்ஜுன் பேசியிருப்பதாவது:

என் தாய், மனைவி, பிள்ளைகள் என்னை நன்றாக கவனித்து கொண்டனர். அவர்கள் எனக்கு நன்மதிப்பு கொடுத்தனர். நானும் அவர்களை நன்றாக கவனித்திருக்க வேண்டும். அவர்களுக்கு உதவியிருக்க வேண்டும். ஆனால், எனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.

என் மேலதிகாரியான துறையின் இணை இயக்குநர் கிருஷ்ணப்பாவின் துன்புறுத்தல் காரணமாகவே நான் இந்த முடிவை எடுத்து உள்ளேன். என் குடும்பம், அவர்கள் மீது எந்த பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்க தேவையில்லை. கடவுளும், சட்டமும் அவர்களை தண்டிக்கும்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர், பாவகடா போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், இணை இயக்குநர் கிருஷ்ணப்பா மீது, தற்கொலைக்கு துாண்டியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், 'தற்கொலை செய்து கொண்ட மல்லிகார்ஜுன் மீது, துறை ரீதியாக இணை இயக்குநர் கிருஷ்ணப்பா விசாரணையை துவங்கி உள்ளார். இன்னும் ஒரு வாரத்தில் மல்லிகார்ஜுன் ஓய்வு பெறவிருந்தார். இந்த விசாரணையால், தன் ஓய்வூதியம் மற்றும் பிற பணி தொடர்பான விஷயங்கள் பாதிக்கும் என்ற காரணத்தால் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம்' என, தெரியவந்துள்ளது.

மல்லிகார்ஜுனாவின் தந்தையும், சமூக நலத்துறையின் பணியாற்றியவர் தான். ஓய்வு பெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன் அவர் மரணடைந்தார். கருணையின் அடிப்படையில், மல்லிகார்ஜுனாவுக்கு அதே துறையில் பணி கிடைத்தது. தற்போது, இவரும் ஓய்வுக்கு ஒரு வாரத்துக்கு முன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

காணொளியில் குறிப்பிட்டுள்ளபடி, அவர் தன் உயர் அதிகாரியின் துன்புறுத்ததால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தன் பிள்ளைகளுக்கு அரசு வேலை கிடைப்பதற்காக இந்த முடிவை எடுத்தாரா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us