தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/சுற்றுலா/சுற்றுலா கட்டுரை

சுற்றுலா கட்டுரை

சுற்றுலா கட்டுரை


ADDED : ஆக 13, 2026 12:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2026 12:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -:

உத்தர கன்னடா மாவட்டம், கோகர்ணா அருகில் அமைந்துள்ளது கும்தா கடற்கரை. இது, ஓர் அழகான சுற்றுலாத்தலமாகும். அதே சமயம், மக்கள் கூட்டம் இல்லாத துாய்மையான கடற்கரையாகும். நகரின் சலசலப்பில் இருந்து விலகி, ஓய்வு எடுக்க விரும்புவோருக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

இந்த கடற்கரையில், சூரிய அஸ்தமனம் பார்ப்பது சிறப்பாக இருக்கும். இங்கு படகு சவாரி உண்டு. கடலுக்குள் படகில் சென்று மகிழலாம். இதற்கு 5,000 ரூபாய் வரை செலவாகும்.

கடற்கரைக்கு அருகிலுள்ள பகுதிகளில் ஏராளமான ஹோட்டல்கள் உள்ளன. இந்த ஹோட்டல்களில் செய்யப்படும் கடல் சார்ந்த உணவுகள் பிரபலமானவை. கடல் உணவுகளை சாப்பிட்டுக் கொண்டே கடலின் அழகை ரசிப்பது சுகமாக இருக்கும்.

இதுமட்டுமின்றி, இங்கு தயாராகும் மர பொம்மைகள் பிரபலமானவை. தரமான மசாலா பொருட்கள் மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

இங்கு வருவோர், மசாலா பொருட்களை வாங்கிச் செல்வதை வழக்கமாக வைத்து உள்ளனர்.

கும்தாவிலிருந்து கோகர்ணா வரை, 25 கி.மீ., கடற்கரையை மணலில் நடந்தே செல்லும், 'பீச் டிரெக்கிங்' வழக்கம் பின்பற்றப்படுகிறது. இதை சில சுற்றுலாப்பயணியர் செய்கின்றனர். இதற்கு நீண்ட நேரம் கடற்கரை மணலில் நடக்க வேண்டும். இதனால், விருப்பமுள்ளவர் மட்டுமே இதை செய்வது சிறப்பு.

இந்த கடற்கரையை சுற்றி ஏராளமான லாட்ஜ், ஹோட்டல்கள் உள்ளன. 2,000 ரூபாய் முதல், 15,000 ரூபாய்க்கும் அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, இங்கு தங்குமிடம் கிடைப்பது சிரமத்தை ஏற்படுத்தாது. இந்த பகுதியில் குறைந்தபட்சம் இரண்டு நாட்களாவது தங்கி ரசிக்கலாம். நிச்சயம் மன அமைதியை தரும்.

எப்படி செல்வது?

பஸ்: பெங்களூரிலிருந்து 500 கி.மீ., தொலைவில் கும்தா கடற்கரை உள்ளது. பெங்களூரிலிருந்து ஆம்னி பஸ்களில் பயணிப்பதன் மூலம் 10 மணி நேரத்தில், கும்தா கடற்கரையை சென்றடையலாம் ரயில்: தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு ரயில் நிலையத்திலிருந்து 56640 என்ற எண்ணுடைய ரயிலில் ஏறி, கும்தா ரயில் நிலையத்தில் இறங்கவும். அங்கிருந்து ஆட்டோ மூலம் கும்தா கடற்கரையை எளிதில் அடையலாம்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us